Recent Posts

"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Friday, August 30, 2013

திரு. R.S ராஜகண்ணப்பன்

திரு.ராஜகண்ணப்பன் தமிழக யாதவ சமுகத்தில் மிக முக்கியமான தலைவரக்களில் ஒருவர். இவர் அமைச்சராக இருந்த போதுதான் யாதவர் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள் அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் கட்டலாங்குலத்தில் வீரன் அழகுமுத்துகோன் சிலை அரசு சார்பில் அமைக்கப்பட்டும் மேலும் வீரன் அழகுமுத்து கோன் குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.மேலும்இவரது முயற்ச்சியால் இந்த காலத்தில் அழகுமுத்து கோனார் பெயரில் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கியது(veeran Azagumthu kone transport corparation)
                                        


பின்னர் கருத்து வேறுபாட்டின் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி தமிழ்நாடு யாதவ மகாசபை ஆதரவுடன் மக்கள் தமிழ் தேசம் கட்சி
என்ற அரசியல் கட்சி தொடங்கினார் இந்த கட்சிக்கு யாதவ மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.


தட்டச்சு வேலை
    தாமோதரன் யாதவ்,திருவண்ணாமலை

Thursday, August 29, 2013

ஐயம்பெருமாள் கோனார்-கோனார் தமிழ் உரை

              திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ஐயம்பெருமாள் 
கோனார் பள்ளிப் பாடநூல்களில் தமிழ் பாடநூல்களுக்கான கையேடுகளை உருவாக்கி வெளியிட்டு வந்தார். இந்த கையேடுகளை கோனார் தமிழ் உரை என்ற பெயரில் சென்னை, பழனியப்பா பிரதர்ஸ் நூல் வெளியீட்டு நிறுவனம் இன்றும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்கு இன்றும் "கோனார் மாளிகை" என்றுதான் பெயர்.


கோனார் தமிழ் உரை என்பது தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம் வெளியிடும் தமிழ் பாட நூல்களை புரிந்து கொள்ள உதவும் வகையில், தனியார் நிறுவனம் ஒன்று வெளியிடும் வழிகாட்டி கையேடு ஆகும். வேறு பல நிறுவனங்கள் வெளியிடும் கையேடுகளும் புழக்கத்தில் இருந்தாலும், அதிகமானவர்கள் அறிந்த வழிகாட்டி உரை நூலாக கோனார் தமிழ் உரை விளங்குகிறது. 


கவியரசு வேகடாசலம் பிள்ளை-மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை-கார்மேகக் கோனார்-அய்யம்பெருமாள் கோனார்.

கவியரசு வேகடாசலம் பிள்ளை: 
 தமிழகத்தின் பெரும்புலவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் காவலராக இருந்து இவர் ஆற்றிய பெரும்பணி மறக்க முடியாதது.

மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை:

இளைய தலைமுறையினரால் இலக்கணத் தாத்தா என்று அழைக்கப்பட்டவர். சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் இலக்கணங்களிலும் வித்தகராக விளங்கியவ்ர்.

கார்மேகக் கோனார்:

தமிழன்னை ஈன்ற தனிப்பெருந்தமிழறிஞர் கார்மேகக் கோனார் நல்லிசைப் புலவர்கள்கண்ணகி தேவிஆபுத்திரன் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டவர்பள்ளிகல்லூரிகளில் தமிழையும் தமிழாசிரியர்களையும் துச்சமாக மதித்து வந்தவர்கள் மத்தியில் தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் உரிய மரியாதையை வாங்கிக் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்பள்ளிகல்லூரிகளுக்கு உரிய நூல்களை வெளியிட்டு சிறப்பு செய்தவர்மாணவர்களிடையே தமிழார்வத்தை வளர்க்கவும் நூல்களை மலிவுவிலையில் கிடைக்கவும் செய்தவர்கோனார் நோட்ஸ் வெளியிட்டு தமிழகம் முழுதும் கல்வியில் புதுவடிவத்தையும் எளிமையையும் ஏற்படுத்தியவர் இவரே
அய்யம்பெருமாள் கோனார்.

கோனார் உரை’யை உருவாக்கித் தந்து தமிழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வியில் பேருதவியாக இருந்தவர்  

அரங்கண்ணல்:
அண்ணாவின் நண்பரும் குடிசை மாற்று வாரியத் தலைவராகவும் இருந்து ஏழைகளுக்கு உதவிய ர்

கொங்கு மண்டல வரலாறு எழுதிய முத்துசாமிக் கோனார்

தி. அ. முத்துசாமிக் கோனார் (1858-1944நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தமிழறிஞர். அர்த்தநாரிக் கோனார், காத்தாய் அம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய பொன்னைய உபாத்தியாயரிடம் தமிழ் கற்றார். பிஜேஜய உபாத்தியாயரிடம் தெலுங்கும் வடமொழியும்கற்றார்.இசை, சமயக் கல்வி ஆகியவற்றிலும் நல்ல புலமை பெற்றவர். யாழ்ப்பாணம் மேலைப்புலோலி கதிரைவேற் பிள்ளையிடம் அஷ்டாவதானம் கற்றார். பலதுறைப் புலமை உடைய இவர் திருச்செங்கோடு மலைக்குப் படி அமைக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தவர். படி மேஸ்திரியாகவும் வேலை செய்துள்ளார். படிப்படியாக இலக்கியத்துறையில் நுழைந்த இவர் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். 'திருச்செங்கோட்டு விவேகதிவாகரன்' என்னும் இதழை நடத்தினார். 'கொங்கு வேள்', 'கொங்கு மண்டலம்' ஆகியவையும் இவர் நடத்திய இதழ்கள். 'கொங்கு நாடு' என்னும் தலைப்பில் முதன்முதலாகக் கொங்கு நாட்டு வரலாறு எழுதியவர் இவர். 'கார்மேகக் கவிஞர்' எழுதிய 'கொங்கு மண்டல சதகம்' நூலை ஓலைச்சுவடியில் இருந்து அச்சில் பதிப்பித்ததோடு அந்நூலுக்கு விரிவான உரை எழுதியுள்ளார்.

"ஊர்பலவும் ஆண்டுகளாய் ஓடிஉழைத்து
உரைகண்டே ஊன்றும் அச்சுத்
தேர்புகுத்தித் தமிழருக்குச் சிறப்பாக
விருந்தளித்த செல்வன்"
என்று பாராட்டி உள்ளார்

திருச்செங்கோட்டைப் பற்றிய பல இலக்கியங்களைப் பதிப்பித்துள்ளார் இவர்.
அவை வருமாறு:
 1. .திருச்செங்கோட்டு மாலை
 2. பணிமலைக் காவலர் அபிஷேக மாலை
 3. திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை
 4. செங்கோட்டுக் குமரர் இரட்டை மணிமாலை
 5. அர்த்தநாரீசுர மாலை
 6. சந்திரசேகர மாலை
 7. கருணாகர மாலை
 8. திருச்செங்கோட்டுப் புராணம்
 9. திருச்செங்கோட்டு மான்மியம்
 10. அர்த்தநாரீசுவரர் பதிகம்
 11. கருணாகரப் பதிகம்
 12. அர்த்தநாரீசுவரர் வருகைப் பதிகம்
 13. உமைபாகப் பதிகம்
 14. பணிமலைக் காவலர் பதிகம்
 15. திருச்செங்கோட்டுக் கலம்பகம்
 16. திருச்செங்கோட்டுப் பிள்ளைத் தமிழ்
 17. அர்த்தநாரீசுவரர் கும்மி
 18. அர்த்தநாரீசுவரர் முளைக்கொட்டுப் பாட்டு
 19. திருமுக விலாசம்
 20. திருச்செங்கோட்டுச் சதகம்
 21. நாரிகணபதி ஒருபா ஒருபஃது
 22. திருச்செங்கோட்டு ஊசல்
 23. திருச்செங்கோட்டு மும்மணிக்கோவை
 24. செங்கோட்டு வேலவர் பஞ்சாமிர்தம்
 25. அர்த்தசிவாம்பிகை நவகம்

ஆனந்தரங்கர்

பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறிய ஒரு அரசியல் ஞானியை ஈன்று உதவியதும் யாதவர்  சமூகம்தான். வரலாறு எழுதுவது என்பது வேறு. வரலாறாக வாழ்வது என்பது வேறு. இந்த இரண்டையுமே செய்தவர்தான் புதுச்சேரியை சேர்ந்த நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கர் (அதாவது டோண்டு ராகவனது சக ஃபிரெஞ்சு-தமிழ் துபாஷி). 

அவர் மட்டும் நமக்கு கிடைக்காமல் போயிருந்தால் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு முழுமையான தமிழக வரலாறு நமக்குக் கிடைக்காமலே போயிருந்திருக்கும்.

சென்னை-பெரம்பூரில் பிறந்த ஆனந்தரங்கர், ஒரு சாதாரண பாக்குக் கிடங்கு ஒன்றின் உரிமையாளராகத்தான் தன் வாழ்க்கையைத் துவங்கினார். புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநர் ட்யூப்ளேயின் மொழி பெயர்ப்பாளராகி (துபாஷி) அரசியல் உலகில் முதன்மையும் முன்னுரிமையையும் பெற்றார். இந்தக் காலத்தில் அவர் எழுதிய நாட்குறிப்புகள்தான் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை


மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. 33 வயதில் சென்னை மக்களுக்கு பல வழிகளில் உயர்வு கொடுத்தவர் இவரே. இவர் மேயராக இருந்த காலத்தில்தான் சென்னை தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றி அதில் வெற்றியும் கண்டது. இவரது காலத்தைத்தான் ‘மாநகராட்சியின் பொற்காலம்’ என போற்றுகிறார்கள்.


‘தமிழர் வீரம்’’தமிழ் வளர்த்த கோயில்கள்’, ‘போர்க்காவியம்’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் இலக்கிய உலகுக்கு அணி சேர்த்தவர் மேயர் ராதாகிருஷ்ணப்பிள்ளை.சென்னைக்கு குடிநீர் தரும் பூண்டி ஏரியை உருவாக்கியவர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. எதுவும் அற்ற ஏழைகள் அவரால் பயனடைந்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரமாக சென்னை இருக்க அடித்தளமாக இருந்தவர். இன்றைய சென்னை மாநகராட்சி வளர்ச்சிக்கு அன்றைக்கே வித்திட்டவர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. மாநகராட்சியின் 10 ஆண்டு சாதனையை ஒரே ஆண்டில் நிறைவேற்றியவர்.


 

Tuesday, August 27, 2013

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி  ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்துசமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவிலும், அஷ்டமி ரோகிணி என்றுகேரளாவிலும் போன்ற பெயர்களாலும் இவ்விழா குறிக்கப்படுகிறது.
இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.


தென்னிந்தியாவில்


தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.
முன்பு, கிருஷ்ண ஜெயந்தியின் போது மஞ்சத் தண்ணீர் ஊற்றுவது இவர்களிடையே பிரசித்தம். முறை மாப்பிள்ளை, மாமன், மச்சான், முறைப்பெண் ஆகியோட் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்கிறார்கள்

வட இந்தியாவில்


ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும்.மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும் வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுக்கள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும்போது தண்ணீர் அடித்து அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது[

விஜயநகரப் பேரரசை உருவாக்கி ஆண்டவர்கள் யாதவர்கள்

முதலாம் ஹரிஹரர் (ஹக்கா),முதலாவது புக்கா ராயன் (புக்கா) ஆகியோரால் நிறுவப்பட்டது. எனினும் இம் மரபின் தோற்றம் பற்றிப் பல்வேறு கோட்பாடுகள் நிலவுகின்றன. ஒரு கோட்பாட்டின்படி, யாதவ / குருபா இனக்குழுவைச் சேர்ந்த புக்காவும், ஹக்காவும் வாரங்கல் அரசரின் படையில் தளபதிகளாக இருந்தனர். முகமது பின் துக்ளக்கோடு நடந்த சண்டையில் இவர்கள் படை தோல்வியுறவே ஹக்காவும், புக்காவும் சிறைப்பிடிக்கப்பட்டு டில்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கே இருவரையும் இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுமாறு செய்யப்பட்டனர். எனினும், அவ்விடத்தை விட்டுத் தப்பிய இருவரும், தமது சமயமான இந்து சமயத்தைக்கைவிடாது, வித்யாரண்யர் என்னும் ரிஷியின் செல்வாக்குக்கு உட்பட்டு விஜயநகரப் பேரரசை நிறுவினர்.


இன்னொரு விளக்கத்தின்படி, ஹம்பிப் பகுதியில் பிறந்த இச் சகோதரர்கள் இருவரும், ஹொய்சலர்களுடன் தொடர்புபட்டிருந்தனர். இதனால் முறைப்படியே இவர்கள் ஹொய்சல நாட்டின் அரசுக்கு வாரிசு உரிமை பெற்றனர்.


இம் மரபைச் சேர்ந்த முதலாவது அரசரானமுதலாம் ஹரிஹரர் விஜயநகரத்தின் எல்லைகளைக் காவிரியிலிருந்து கிருஷ்ணாவரை விரிவு படுத்தினார். எனினும்,பஹமானி சுல்தான்களுடன் இவருக்குத் தொடர்ந்து முரண்பாடுகள் இருந்துவந்தது. இவருக்குப் பின்னர் இவர் தம்பியான புக்கா ராயன் அரசனானான். இவன் நாட்டை, தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் விரிவாக்கினான். இவன், மதுரையைக்கைப்பற்றித் தனது நாட்டு எல்லையைத் தெற்கே இராமேஸ்வரம் வரை கொண்டுசென்றான். சம்புவரையர்கள், ஆற்காட்டு அரசு, கொண்டவிடு ரெட்டிகள், ஆகியோரைத் தோற்கடித்ததுடன், கோவா, ஒரிஸ்ஸா ஆகிய அரசுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். இலங்கை, மலபார் ஆகியவற்றையும் தனக்குத்திறை செலுத்துமாறு செய்தான்.


முதலாம் ஹரிஹரர்:

            


முதலாம் ஹரிஹரர் (கி.பி. 1336-1356)விஜயநகரப் பேரரசை நிறுவியவர் ஆவார். ஹக்கா, வீர ஹரிஹரர் போன்ற பெயர்களாலும் அறியப்படும் இவர் குருபா(Kuruba) இனக்குழுவைச் சேந்தவரும், சங்கம மரபைத் தொடங்கியவருமான பாவன சங்கமரின் மூத்த மகனாவார். சங்கம மரபு, விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்கு மரபுகளுள் முதலாவதாகும். ஆட்சிக்கு வந்த உடனேயே தற்காலக் கர்நாடகத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள பர்கூரு என்னுமிடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டினார். இவர் 1339 இல் அனந்த்பூர் மாவட்டத்திலுள்ள குட்டி (Gutti) என்னும் தனது தலைமையிடத்திலிருந்து இன்றைய கர்நாடகத்தின் வடக்குப் பகுதிகளை நிர்வகித்து வந்தது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவர் தொடக்கத்தில், ஹொய்சால அரசின் வடக்குப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகத் தெரிகிறது. பின்னர் 1343 இல் ஹொய்சால அரசன் மூன்றாவது வீர பல்லாலனின்மறைவைத் தொடர்ந்து ஹொய்சாலம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
இவர் காலத்துக் கன்னடக் கல்வெட்டுக்கள், இவரை, கர்நாடக வித்யா விலாஸ் (மிகுந்த அறிவும், திறமையும் கொண்டவன்),ஆங்ரயவிபாடா (எதிர் அரசர்களுக்குத் தீ போன்றவன்), உறுதிமொழிகளைக் காப்பாற்றாத நிலப்பிரபுக்களைத் தண்டிப்பவன் எனப் பலவாறாகப் புகழப் படுகிறார். இவருடைய தம்பிகளுள், புக்கா ராயன் பேரரசருக்கு இரண்டாவது நிலையில் இருந்தான். கம்பண்ண என்பவன் நெல்லூர் பகுதியையும், முட்டப்பா முலபாகலு பகுதியையும், மாரப்பா சந்திர குட்டியையும் நிர்வாகம் செய்து வந்தனர்.
இவருடைய தொடக்கப் போர்கள் மூலம்,துங்கபத்திரை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவிக் கொண்டார். பின்னர் இவருடைய கட்டுப்பாடு படிப்படியாக, கொங்கண், மலபார் கரையோரங்களிலுள்ள சில பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இக்காலத்தில், மதுரை சுல்தானுடன் நிகழ்ந்த போரில் ஹொய்சாலத்தின் கடைசி அரசன் மூன்றாவது வீர பல்லாலன் இறந்தான். இந்த வெற்றிடம் அப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு ஹரிஹரருக்கு வாய்ப்பாக அமைந்தது. முழு ஹொய்சால அரசும் ஹரிஹரரின் நேரடி ஆட்சியின்கீழ் வந்தது. 


முதலாவது புக்கா ராயன்:புக்கா என அழைக்கப்படும் முதலாவது புக்கா ராயன் (கி.பி. 1356-1377) விஜயநகரப் பேரரசின் இரண்டாவது பேரரசன் ஆவான். தனது தமையனான முதலாம் ஹரிஹரருடன்சேர்ந்து விஜயநகரப் பேரரசை நிறுவியதில் இவனுக்குப் பெரும் பங்கு உண்டு. ஹரிஹரரின் ஆட்சிக்காலத்தில் அரசருக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருந்தபுக்கா, ஹரிஹரரின் மறைவுக்குப் பின்னர் அரசனானான். இவன் சங்கம மரபைச்சேர்ந்தவன். இவனுடைய தொடக்ககால வாழ்க்கை பற்றி அதிகம் தெளிவில்லை. இது பற்றிப் பல கோட்பாடுகள் நிலவுகின்றன (விவரம் இங்கே). எவ்வாறாயினும், ஹரிஹரரும், புக்கா ராயனும் விஜயநகரப் பேரரசை நிறுவியதிலும், பின்னர் பெற்ற போர் வெற்றிகள் மூலமும் பெரும் புகழ் பெற்றனர்.
புக்கா ராயனின் இருபத்தோரு ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் எல்லைகள் தொடர்ந்து விரிவடைந்து சென்றன. இவன்தென்னிந்தியாவின் பல அரசுகளைத் தோற்கடித்து அங்கெல்லாம் தனது கட்டுப்பாட்டை நிறுவினான். ஆற்காட்டுச்சம்புவரையரும், கொண்டவிடு ரெட்டிகளும் 1360 இல் புக்கா ராயனிடம் தோற்றனர். 1371 இல் மதுரையில் இருந்த சுல்தானகத்தைத்தோற்கடித்துப் பேரரசின் எல்லைகளை தெற்கே இராமேஸ்வரம் வரை விரிவாக்கினான். புக்கா ராயனின் மகனானகுமார கம்பண்ணனும் இவனது படையெடுப்புக்களில் கலந்து கொண்டது பற்றி, இவனது மனைவியானகங்காம்பிகாவினால் எழுதப்பட்ட மதுரா விஜயம் என்னும் சமஸ்கிருத நூலில் விளக்கப்பட்டுள்ளது. 1374 ஆம் ஆண்டளவில், பஹ்மானிகளுக்கு எதிராகதுங்கபத்திரை - கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலத்தின் கட்டுப்பாடு தொடர்பில் இவனது பலம் அதிகரித்தது. இவன் கோவா, ஒரிஸ்ஸா ஆகிய அரசுகளையும் கைப்பற்றினான். இலங்கையில் யாழ்ப்பாண அரசு மற்றும் மலபார் அரசுகளிடமிருந்து திறையும் பெற்றான்.
புக்காவின் ஆட்சிக்காலத்தில், இவன் பஹ்மானி சுல்தான்களுடனும் மோதியுள்ளான். முதல் தடவை முதலாவது முஹம்மத்தின் காலத்திலும், பின்னர் முஜாஹித்தின்காலத்திலும் மோதல்கள் நிகழ்ந்தன. இவன் சீனாவுக்கும் தூதுவர்களை அனுப்பியதாகத் தெரிகிறது. புக்கா கி.பி. 1380 ஆம் ஆண்டளவில் காலமானான். இவனைத் தொடர்ந்து இரண்டாம் ஹரிஹர ராயன் ஆட்சிக்கு வந்தான். புக்காவின் காலத்திலேயே விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விஜயநகரம் ஆகியது. துங்கபத்திரையின் தென்கரையில் இருக்கும் இது முன்னைய தலைநகரானஅனகொண்டியிலும் பாதுகாப்பானதாகும். இக்காலத்தில் நடைபெற்ற உள்நாட்டு முரண்பாடுகள், வெளி அரசுகளுடனான சண்டைகள் என்பவற்றுக்கு மத்தியிலும் புதிய நகரத்தை மேம்படுத்துவதில் புக்கா கவனம் செலுத்த முடிந்தது குறிப்பிடத் தக்கதாகும். பல இக்கியங்களும், சமய நூல்களும் இவன் காலத்தில் ஆக்கப்பட்டன. பல அறிஞர்கள், வித்தியாரண்யர், சாயனர் ஆகியோரின் வழிகாட்டல்களின் கீழ் இருந்து வந்தனர். வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் முதலிய இந்து நூல்களுக்கான சாயனருடைய உரைகள், புக்காவின் ஆதரவிலேயே எழுதப்பட்டன.

அசோகப் பேரரசர்

அசோகர் மௌரிய வம்சத்தை சேர்ந்த இந்திய அரச யாதவர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.
Chakravatin.JPG


கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார்.புத்த மதத்தை ஆசியாவெங்கும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான் புத்த விகாரங்கள் கட்டினார். இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராக கருதப்படுகிறார்.

சந்திரகுப்த மெளரியர்


மவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மெளரியர் ஆவார் ,மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு அதன் தலை நகரம் பாடலி புத்திரம், இது தற்போதைய பீகார், தலை நகரம் பாட்னா என அழைக்கப்படுகிறது.

.இவர் இடையர் குலம்  மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் மயுரா எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர் அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் முரா என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர்.காட்டில் இருந்த சந்திரகுப்தரை நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.
சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார்.தென்னிந்தியா வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசி காலத்தில் சமண மத துறவியாகி பெங்களூர் அருகே உள்ள சரவன பெலகுலாவில் பத்திரபாகு என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்கை வாழ்ந்து உயிர் துறந்தார் ,இதனாலேயே அங்குள்ள மலைக்கு சந்திர கிரி என்ற பெயர் வந்தது.


பிந்துசாரர்

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார், பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால் , சுஷ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள்(பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப்பொருள் படும்).
பிந்து சாரர் திருனெல்வேலி வரைக்கும் படை எடுத்து வந்து வென்றதாக கூறுகிறார்கள்.இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.
பிந்து சாரருக்கு பிறகு அரியனை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு. திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.

சக்கரவர்த்தி அசோகர்(கி.மு 273 - 232)

அசோகர் பிந்துசாரருக்கும் அவரது பிராமண மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர் , சிலர் அவர் செல்லுகஸ்நிக்கேடர் என்ற கிரேக்க மன்னன் மகள் என்பார்கள்.
அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிக குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார் இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் (மகிந்த தேரர்,சங்கமித்தையும் பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினார்.
EdictsOfAshoka.jpg
கலிங்கப் போருக்கு முன்னர் அசோகர் கொடுங்கோலராக இருந்துள்ளார், தனது அரண்மனையில் ஒரு சித்திரவதை கூடம் அமைத்து தவறு செய்பவர்களை பல வகையிலும் தண்டித்துள்ளார். அசோகர் கரிய நிறமும் , அழகற்றவராகவும் இருந்துள்ளார் இதனை கிண்டல் செய்த அந்தப்புற பெண்கள் 1000 பேரை கழுவில் ஏற்றி கொன்று உள்ளார்.
சந்திர குப்தர் , பிந்து சாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்கு பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள் , எனவே ஒரே அடியாக கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார்.
கலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒரிஸா, மகத நாடு தற்போதைய பீகார். கலிங்க நாட்டை ஆட்சி செய்தது கரவேளர்கள் என்ற அரச வம்சம். கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை எந்த வரலாற்று நூலிலும்.
கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார் அசோகர். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர்.இக்கொடிய போர்க்களக்காட்சியை கண்டு தான் அசோகர் மனம் மாறினார். புத்த சமயத்தை தழுவி ,சமாதானம் தழைக்கப் பாடுபட்டார். ஆனால் உண்மையில் இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்பார்கள். அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர் , அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார் ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.
அசோகருக்கு தேவி என்ற மனைவி தவிர வேறு பல மனைவிகள் உண்டு அந்த வகையில் குணாளன் , ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு.இதில் குணாளன் அழகு மிகுந்தவர் எனவே அவர் மீது அசோகரின் மற்றொரு மனைவியான திஷ்யரக்ஷதா என்பவர் ஆசைக்கொண்டார், ஆனால் குணாளன் தனது சிற்றன்னையின் விருப்பதிற்கு இணங்கவிலை. எனவே, வஞ்சகமாக அவரை வெளிநாட்டுக்கு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு வைத்து தனது ஆட்களை வைத்து கண்களை குருடாக்கி விட்டார்.
கண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைநகரம் வந்து பாடலிபுத்திரத்தின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்தார் அவரது குரலை அடையாளம் கண்டு அசோகர் விசாரித்து உண்மை அறிந்து திஷ்யரக்ஷதாவின் தலையை துண்டித்தார்(இப்படி ஒரு கதையம்சம் கொண்ட சிவாஜிகணேசன் நடித்த படம் கூட உண்டு பெயர் சாரங்கதாரா
தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு கட்டிய உடையுடன் வாழ்ந்தார். அவரது இறுதிக்காலம் மிகவும் துன்பமானதாகவும் தனிமையாவும் அமைந்தது. இருந்த செல்வம் அனைத்தையும் தானம் செய்துவிட்டதால் ஆட்சிக்கு வந்த மற்றொரு மகன் ராதாகுப்தர் என்பவர் அசோகரை புறக்கணித்து கவனிக்காமல் விட்டு விட்டார்.

தேவனாம்பியாச பிரியதர்ஷன்

தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரில்யே அசோகர் ஆட்சி புரிந்தார் ,அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது , பின்னர் ஒரு வெள்ளைக்கார ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை நிரூபித்தார்; இல்லை எனில், இன்று நமக்கு அசோகர் குறித்த விவரங்கள் தெரியாமலே போய் இருக்கும்.
அசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள் மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கர் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாக கொன்று சுங்கவம்ச அரசை நிறுவினார் அத்துடன் மாபெரும் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.
 • அசோகர் பின்னாளில், இலங்கை அரசன் ஒருவனுக்கு முடியுடன், தேவநம்பிய என்ற பட்டமும் அளித்ததாக மகாவம்சம் கூறுகிறது. அவ்வரசன் பெயர்தேவநம்பிய தீசன் என்று பின்னாளில் அறியப்படுவதாயிற்று.

அசோகர் கல்வெட்டுக்கள்

பேரரசர் அசோகர் கல்வெட்டுக்கள் இந்திய துணை கண்டத்தின் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன. குறிப்பிடத்தக்க கல்வெட்டுக்கள்:
 • பதினான்கு பாறை வெட்டுக்கள்
 • கலிங்க பாறை வெட்டுக்கள்
 • சிறு பாறை வெட்டுக்கள்
 • ஏழு தூண் வெட்டுக்கள்
 • சிறு தூண் வெட்டுக்கள்

பதினான்கு பாறை வெட்டுக்கள்

புகழ் பெற்ற பதினான்கு பாறை வெட்டுன் ஆறாம் கருத்து மன்னர் மக்களின் பிரச்னைகளை உடனடியாக கவனிப்பதை உணர்த்துகிறது.
கடவுளுக்குப் பிரியமான மன்னர் பிரியதர்சி இவ்வாறு சொல்கிறார்: 'இதற்கு முன் அரசாங்க வேலைகளைச் சரியாகக் கவனிக்க முடியாமலும், சரியான நேரத்தில் சரியான தகவல்களைப் பெற முடியாத நிலையும் இருந்து வந்தது. அதனால், இந்தப் புதிய ஆணை பிறப்பிக்கப்படுகிறது. மாமன்னராகிய நான் எந்த நேரத்திலும், உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும், படுக்கையறையில் சயனம்கொண்டு இருந்தாலும், தேரில் பயணம் செய்துகொண்டு இருந்தாலும், பல்லக்கில் இருந்தாலும், கேளிக்கை நிகழ்வுக்காக பூங்காவில் இருந்தாலும், வேறு எந்த இடத்தில் எப்படி இருந்தாலும், அரசாங்க அலுவலர்கள் மூலம் மக்களின் பிரச்னைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் எனக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே மக்களின் பிரச்னைகளை உடனடியாக என்னால் கவனிக்க முடியும். கொடை மற்றும் நலத் திட்டப் பொது அறிவிப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தைகளாகப் பிறப்பித்து இருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர உத்தரவுகள் தொடர்பாக யாருக்காவது ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது தொடர்பான தகவல்கள் உடனடியாக மன்னராகிய என்னிடம் வந்து சேரவேண்டும். இது என்னுடைய ஆணை. வேலையைக் கவனமாகச் செய்வதிலும் அதற்காக கடுமையாக உழைப்​பதிலும் போதும் என ஒரு நாளும் நான் திருப்தி அடை​வது இல்லை. மக்கள் அனைவரது நலத்தையும் பேணுவதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் சிறப்பாகச் செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது, ஆகவே, வேலை​களைத் தாமதமின்றி உடனே முடிக்க வேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதும் இல்லை. இந்தத் தர்ம ஆணை, வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், என் மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும், கல்வெட்டில் எழுதப்படுகிறது’

Monday, August 26, 2013

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்

தாண்டவராயக் கோனார் கூற்று
கண்ணிகள்
எல்லா உலகமும் எல்லா உயிர்களும்
எல்லா பொருள்களும் எண்ணரிய
வல்லாளன் ஆதிபரம சிவனது
சொல்லால் ஆகுமே கோனாரே. 1
வானியல் போல் வயங்கும் பிரமமே
சூனியம் என்றறிந்து ஏத்தாக்கால்
ஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லையென்று
ஓர்ந்து கொள்ளுவீர் நீர் கோனாரே. 2
முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும்
சேரா வாகுமே கோனாரே. 3
தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே
சோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு
இல்லையென்று எண்ணுவீர் கோனாரே. 4
ஆரண மூலத்தை அன்புட னேபர
மானந்தக் கோலத்தைப் பண்புடனே
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்
போதத்தைச் சார்ந்திரும் கோனாரே. 5
காலா காலங் கடந்திடும் சோதியைக்
கற்பனை கடந்த அற்புதத்தை
நூலார் பெரியவர் சொன்னநுண் பொருளை
நோக்கத்திற் காண்பது கோனாரே. 6
சொல்லருஞ் சகள நிட்களம் ஆனதைச்
சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலும் அகத்தில் இருந்திடில்
அந்தகன் கிட்டுமோ கோனாரே. 7
சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடும்
தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாறி இடப்பாகன்தாள் நெஞ்சிற் போற்றியே
நற்பதி சேர்ந்திடும் கோனாரே. 8
மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை யமயத்தும்
சிந்தையில் வைப்பீரே கோனாரே. 9
பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
பற்றற்று நின்றதைப் பற்றி அன்பாய்
நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே
நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே. 10


யாதவ மகாசபை

யாதவ மகாசபை என்பது உலக அளவில் தமிழ் பேசும் யாதவர்களின்(கோனார) சமுதாய அமைப்பாக உள்ளது.இந்த அமைப்பின் தலைவராக திரு.தி தேவநாதன் யாதவ் உள்ளார்.இந்த அமைப்பின் முதல் மாநாடு நெல்லையில் வீரன் அழகுமுத்து கோன் சிலை திறப்புடன் தொடங்கியது.
                 நெல்லையில் திறக்கப்பட்ட வீரன் அழகுமுத்து கோன் சிலை


இந்த அமைப்பின் இரண்டாவது மாநாடு சென்னையில் 30-01-2011 அன்று
  யாதவர் வாழ்வுரிமை மீட்பு என்ற பெயரில் நடைபெற்றது.
யாதவ மகாசபையில் பிரதான கோரிக்கைகளாக அரசியல் அதிகாரம் யாதவர்களுக்கு மிகவும் பிற்படுத்த பட்டியலில் இடம்(MBC)இதற்காக பல்வேறு போராட்டங்களை இந்த அமைப்பு முன் நின்று நடத்தி வருகிறது
இந்த மாநாட்டில் உலக முழுவதும் இருந்து பல லட்சம் யாதவர்கள் சொந்தங்கள் கலந்து கொண்டார்கள்

  யாதவ மகாசபை சார்பிதுல் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மாவட்டம், நகரம்,ஓன்றியம், கிளை என பட்டி, தொட்டியெல்லாம் யாதவர்களை  யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பல்வேறு மாநாடு, பேரணி, கூட்டங்கள் நடத்தி கொண்டிருக்கிறோம் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சென்னை மன்ரோ சிலை அருகிலிருந்து பேரணியும், 25.04.2010 நெல்லையில் மாநில மாநாடும், 21.08.2010 சென்னையில் பேரணியும், 30.01.2011 சென்னை ராயபேட்டையில் மாநில மாநாடும், 25.04.2012  சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தியது

Saturday, August 24, 2013

Chief Minister of yadava Community

1.      Chaudhary Brahm Prakash Yadav
First CM of Delhi

2.      Praffula Chandra Ghosh
First CM of West Bengal

Former CM of Bihar and Madhya Pradesh

4.      Bindheshwari Prasad Mandal
Former CM of Bihar

5.      Ram Naresh Yadav
Former CM of Uttar Pradesh

6.      Babulal Gaur
Former CM of Madhya Pradesh

7.      Rao Virendra singh
Former CM of Haryana

8.      Daroga Prasad Rai
Former CM of Bihar

9.      Pattom Thanu Pillai
2nd CM of Kerala

10.  Lalu Prasad Yadav
Former CM of Bihar  and Former Railway Minister in Govt. of India

11.  Mulayam Singh Yadav
Former CM of Uttar Pradesh and former defense Minister in Govt. of India

12.  Rabri Devi
Former CM of Bihar 

     13.Akhilesh Yadav
CM of Uttar Pradesh

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar