Recent Posts

"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Thursday, February 27, 2014

ஆயர் விளையாட்டு-II


                      முல்லை நிலமக்களின் வீரவிளையாட்டாக விளங்குவது ஏறுகோள் (ஆயர் விளையாட்டு) ஏறு தழுவலாகும். இவ்விளையாட்டு இன்றும் விளையாடப்பட்டு வருவதைக் காண்கிறோம். இதற்கு மதுரை அலங்காநல்லூர் குறிப்பிடதக்க ஊராகும். இவ்வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்றும், காளை விரட்டு என்றும், வடமாடு என்றும், மஞ்சுவிரட்டு என்றும், எருதுகட்டு என்றும் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் திருநாளாம்
பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். வேறு சங்க நூல்களில் காணப்பெறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே குறிப்பிடுகின்றது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன.


                               முல்லை நிலத்தில் வாழ்ந்த செல்வப் பெருங்குடி ஆயர் மக்கள் தங்கள் மந்தையில் காளைக் கன்று ஒன்றைத் தனியே வளர்ப்பார்கள். இதற்குத் தனியாக போர்ப் பயிற்சி கொடுத்து ஏறுதழுவலுக்குப் பயன்படுத்துவார்கள். தங்களின் வீட்டில் வளரும் மகளுக்கு பருவம் வந்தவூடன் காளையை அடக்கி வெற்றி கொள்ளும் காதலனுக்கு மணம் முடித்து வைப்பார்கள். அன்றைய மகளிர் ‘கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகிறவனை மறுமையிலும் ஆயமகள் தழுவமாட்டாள், என்று சூளுரைத்திருக்கின்றனா;.

                      காதலும் வீரமும் தமிழா தம் இரு கண்களாக இணைந்து நிற்பன. இந்த இணைப்பை முல்லைக் கலியில் பெரிதும் காணலாம். “ஆயர்களின் வீரத்தையூம் அஞ்சாமையையூம் எடுத்துக்காட்டும் ஏறுதழுவல் என்னும் முல்லை நில வழக்கத்தை முல்லைக்கலி மட்டுமே விளக்கமாகக் கூறுகின்றது. பிற சங்க நூல்கள் கூறவில்லை. ஆகவே கலித்தொகையில் முல்லைக்கலி புதுமையானது. கிரேக்க நாட்டில் நடைபெற்ற வீர விளையாட்டுகளில் ஒன்றான பொன் நீர் நாய்ப் போட்டியைப் பற்றிய பாடல்கள் ஏறுதழுவலைப் பாடும் முல்லைக் கலிப் பாடல்கள் போன்றுள்ளன எனக் கருதப்படுகின்றது.”

ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்பதை,

ஓஓ! இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,
திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட் டவள்.


என்னும் வரிகள் விளக்குகின்றன. பசுத்திரளை உடைய ஆயர் மகனுக்கு தலைவியை மணம் முடிக்க பெற்றோர் எண்ணினர். தான் விரும்பிய தலைவனோ செங்காhpக் கொம்பிடையில் புகுந்து தழுவி வெற்றி கொண்டுவிட்டான். தலைவியின் மணம் உறுதியாகிவிட்டதை,

இன்று எவன், என்னை எமர் கொடுப்பது-அன்று, அவன்
மிக்குத்தன் மேற்சென்ற செங்காரிக் கோட்டிடைப்
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு!.3

என்ற பாடல் வரிகள் உணா;த்துகின்றன. ‘ஏறுகொள்ள வல்லார் என்னைப் போன்றவர் எவரும் இலர் என வீரம் பேசும் பொதுவன் தலைவிக்கு ஒருநாள் உறவினன் ஆகாமற் போவதில்லை. அத்தலைவனைக் கண்டு கண்களும் காதற் பயிhpனை வளர்க்கிறதாம் தலைவிக்கு. இதை,

‘கோளாளா என்ஒப்பார் இல்’ என நம்மானுள்,
தாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒருநாள்,
கோளாளன் ஆகாமை இல்லை; அவற்கண்டு
வேளாண்மை செய்தன கண்இ4


என்னும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.

மெல்லிணா;க் கொன்றையூம், மென்மலர்க் காயாவூம்,
புல்லிலை வெட்சியூம், பிடவூம், தளவூம்,
குல்லையூம், குருந்தும், கோடலும், பாங்கரும்-
கல்லவூம், கடத்தவூம்- கமழ் கண்ணி மலைந்தனர்.5


இவ்வாறு பல மலர்களைச் சூடி ஆயா; இளைஞர்கள் விரைந்து வந்து ஏறு தழுவூதலைக் காண விரும்பிய ஆயமகளிர் பலரும் பரண்களில் முற்படவே வந்து அமர்ந்தனர்.

முல்லை முகையூம் முருந்தும் நிறைத்தன்ன
பல்லா, பெருமழைக் கண்ணா, மடம் சேர்ந்த
சொல்லா, சுடரும் கனங்குழைக் காதினர்.6


இவ்வாறு ஆய மகளிரும் ஏறுதழுவலைக் காண ஆர்வம் காட்டியூள்ளனர். ஏறுதழுவி வென்ற வீரனையே மணக்கவூம் விரும்பினர்.கெல்லேற்றுக்குஅஞ்சுகின்றவனை ஆயமகள் தழுவ விரும்பவில்லை உயிருக்குப் பயந்து ஏறுதழுவாதிருக்கும் ஆயர் இளைஞரை யாரும் விரும்புவதில்லை. தாம் காதலிக்கும் பெண்ணின் முலையிடை போலக் கருதி, ஆர்வமுடன் வீழ்ந்து தழுவி வெற்றியடைபவர்களையே பெற்றோர் தம் மகளுக்கு ஏற்றவனகாக் கருதுவார்கள் என்பதை,

கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர் துறந்து-
நைவாரா ஆயமகள் தோள்,
வளியா அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்-
கொலையேற்றுக் கோட்டிடைத், தாம்வீழ்வர் மார்பின்
முல்லையிடைப் போலப், புகின்.
ஆங்கு:
குரவை தழீ, யாம், மரபுளி பாடி, 7

என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.

Wednesday, February 26, 2014

யாதவர்களே சூளுரைப்போம் ! அணைத்து யாதவ மக்களையும் விழிப்படைய செய்வோம் ! !வெற்றிபெருவோம்!!!

1.உங்கள் தொகுதியில் யாதவ கட்சி சார்பாக யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கே நீங்கள் ஓட்டுப்போட வேண்டும் !

2.யாதவர் ஒருவர் எந்த கட்சியையும் சாராது தனித்து போட்டியிட்டால் அவருக்கே உங்கள் ஓட்டு என்பதை உறுதி செய்ய வேண்டும் !

3. தி மு க கூட்டணி , அ தி மு க கூட்டணி , பா ஜ க கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி என எந்த கூட்டணி கட்சிக்கும்
ஓட்டுப் போடக் கூடாது !

4. ஒரு வேலை உங்கள் தொகுதியில் யாதவர்கள் யாரும் போட்டியிடவில்லை எனில் "நோட்டா" விற்கு(வாக்கு பேட்டியில் உள்ள கடைசி பொத்தான் ) ஓட்டு போடுங்கள் !

5. தேர்தலை எக்காரனதிர்க்கும் புறக்கணிக்க வேண்டாம் .

அனைவரையும் மேற்கண்டபடி செயல்பட செய்யுங்கள் !

விளிப்புணர்வு பிரசாரத்தை இன்றே தொண்டங்குங்கல் , எதிர் மறை உபதேசம் செய்வோரை கண்டுகொள்ள வேண்டாம் . ஏன் எனில் அவர்களால் உபதேசம் மட்டும்தான் செய்யமுடியும் ! உருப்படியாக நம் இனம் முன்னேறவோ அல்லது அரசியலில் உரிய அங்கீகாரம் கிடைக்கவோ செய்ய முடியாது !

காலம் காலமாக திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து வரும் நம் குடும்பத்தாரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது கடமை . அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள் பிற சாதிக் காரர்களின் அரசியல் அங்கிகாரம் எங்குள்ளது ? நமது யாதவ இனத்தின் அரசியல் அங்கிகாரம் எங்குள்ளது ? நம்மை மதிக்கதவர்களுக்கு நாம் ஏன் ஓட்டுப் போட வேண்டும் ? நாம் ஏன் அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் ?

யாதவர்களே நமக்குள் எதனை மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும் அனைவரும் ஒருமித்த மனதோடும் மேற்கண்ட ஒருமித்த முடிவோடும் செயல்படுவது அவசியம் ! இப்படியே நாம் பிரிந்து கிடந்தால் தமிழகத்தில் யாதவன் என்ற ஓர் இனம் எப்படி கேவலமாக வாழ்ந்தது , ஒன்றுமை இன்றி எப்படி முன்னேராமல் போனது என வருங்கள வரலாற்றில் கேவலமான ஓர் பக்கத்தில் நான் இடம் பெறுவோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது !

இனியாவது விழித்துக்கொள் , சிலர் சாதியை பார்க்காதே நாட்டின் நலனை பார் என பேசுவர் , அவ்வாறு பேசுவோர் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் , இன்றைய அரசியல் கட்சிகள் அனைத்தும் சாதியாப் பார்த்தே வேட்பாளரை நிறுத்துகிறது ! நல்லவனா? கெட்டவனா? படித்தவனா ? படிக்கதவனா ? சுயநலவாதியா ? பொது நலவாதியா? என அரசியலுக்கு தேவையான எதையும் பார்ப்பதில்லை ! அவர்கள் பார்ப்பதெல்லாம் எந்த தொகுதியில் எந்த சாதி மக்கள் அதிகம் ? அந்த சாதியில் ஒருவரை வேட்பாளராக தேர்தெடுக்கும் கேவலமான பணியை செய்யும் அரசியல் கட்சிகளை விடவும், எங்கள் முடிவு ஒன்றும் கேவலமானது இல்லை !

யாதவனையோ அல்லது அவன் எடுக்கப் போகும் மேற்கண்ட முடிவினையோ விமர்சிக்கும் தகுதி எவருக்கும் இல்லை என்பதை யாதவர்களாகிய நாம் உணர வேண்டும் !

என் யாதவ சொந்தங்களே , தயவு செய்து இனிவரும் காலங்களில் உங்களின் செயல் முழுவது மேற்கண்ட விழிப்புணர்வை நம் இன மக்களிடையே கொண்டு சேர்ப்பதாகவே இருக்க வேண்டும் . தேர்தல் முடியும் வரை காலை வணக்கம் , இரவு வணக்கம் , யாதவர்கள் புகழ் வீரம் , சுய விளம்பரம் என அணைத்து விதமான கேளிக்கைகளையும் அதிக அளவு குறைத்துக் கொண்டு , நம் இனத்திற்காக , நம் யாதவ கட்சிக்காக பிரசாரம் செய்யுங்கள் ! யாதவ நபர்கள் அனைவரயும் இந்த குழுவில் சேர்த்து விடுங்கள் , அனைரும் ஒரு குடையின் கீழ் வருவோம் , விவாதிப்போம் , மேற்கண்ட முடிவின் படி செயல்படுவோம் ....

யாதவன் பலம் என்ன என்பதை வரும் தேர்தலில் நிரூபித்தால் தான் , 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் நமக்கான உரிமையை , முக்கியத்துவத்தை , அரசியல் அங்கீகாரத்தை பெறமுடியும் !

நன்றி !

Thursday, February 20, 2014

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..!!!!திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.!!!

Wednesday, February 19, 2014

திருச்சி விலங்கின மருத்துவர் திரு.மா. கங்காதரக் கோனார்

ஜாதி செருக்கைச் சாடி நீதிக்குப் போராடிய மாமனிதர் திருச்சிராப்பள்ளி மாரிமுத்து கங்காதரக் கோனார். அவர் 1908ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் அவர் தந்தை அவரை மதுக்கடைக்குச் சென்று மது வாங்கி வரப் பணித்தார். ஆனால் கங்காதரர் எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்தார். வாழ் நாள் முழுவதும் மது அருந்துவதையோ, புகைத்தலையோ, புலால் உணவு உண்ணுவதையோ அவர் விரும்பவில்லை. பின்னாளில் விலங்கின மருத்து வராகப் பணியாற்றிய காலத்திலும் இப்பழக்கங்கள் அவர்பால் இல்லை.
முதல் உலகப் பெரும்போரில் போர்ப்படையில் பணி புரிந்தார். அப்பணியில் பெற்ற ஊதியத்தை இயன்றவரை சேமித்துச் சென்னை விலங்கின மருத்துவக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். அவர் படித்த கல்லூரி மாணவர் விடுதியில் அக்கால நிலைக்கு ஏற்ப பார்ப் பனருக்குச் சிற்றுண்டி உணவருந்தத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அக்காலத்துப் பொது உணவு விடுதிகளிலும் இந்நிலை இருந்தது. அந்நிலை மாற கங்காதரக் கோனார் வெகுண்டெழுந்தார். உண்ணாநோன்பு மேற்கொண்டார். அக்காலத்தில் தந்தை பெரியாரின் குடியரசு ஏட்டிலும் இச்செய்தி வெளியிடப்பட்டது.
நன்னிலத்தில்  அவர் கால்நடை மருத்துவராகப் பணியாற்றிய காலத்தில் அஞ்சல் அலுவலகத் தலைவர். வட்டாட்சியர், விலங்கின மருத்துவர் இம் மூவரைத் தவிர மற்ற உயர் அலுவலகப் பணிகளில் பார்ப்பனரே இருந்தனர். அஞ்சல் ஊழியர் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவரே. இவர்கள் பார்ப்பனர் வாழும் இடத்துக்குச் செல்லும்போது வெயிலின் வெம்மையிலும் காலணி அணியக்கூடாது எனத் தடுக்கப்பட்டனர். கங்காதார் அவர்களைக் காலணி அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அவரை எதிர்க்கும் துணிவு பார்ப்பனருக்கு இல்லை. எனவே அக்கொடிய பழக்கம் ஒழிந்தது.
டாக்டர் கங்காதரனின் இளவல் திரு. கிருஷ்சாமிக்குச் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வித்தார்.டாக்டர் க. முத்துபாபு (இணை இயக்குநர் கால் நடைப் பராமரிப்பு), பேரா. க. பாஸ்கரன் (கல்லூரி கல்வி இணை இயக்குநர்) ஆகியோர் அன்னாரது திருக்குமாரர்களாவர். நெஞ்சுரங்கொண்ட கங்காதரரை நினைவில் நிறுத்துவோமாக.

Monday, February 17, 2014

மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்கும்: முலாயம்சிங்

மத்தியில் 3-வது அணி  ஆட்சி அமைக் கும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர்  முலாயம்சிங் யாதவ் கூறினார். கோரக் பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முலாயம்சிங் பேசியதாவது:

நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்த லில் 3-வது அணி ஆட்சி அமைக்கும். இந்த தேர்தலில்  காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு தனிப் பெரும்பான்மை  கிடைக்காது. அந்த நிலையை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.  அதற்கு 3-வது அணிதான் தீர்வாக அமையும்.  3 -வது அணி ஆட்சி அமைக்கும். அந்த அரசாங் கத்தில் நாம் பெரிய கட்சியாக பங்கேற்போம். நான் பிரதமர் ஆக மக்கள் ஆதரவு தர வேண்டும். உத்தரபிரதேசத்தில் உள்ள 80  தொகுகிதளிலும்  நாம் வெற்றி பெற்றால் போதும். நமக்கு ஆட்சி அமைக்கும் பலம் கிடைத்துவிடும். வேறு எந்த மாநிலத்திலிருந்தும் இவ்வளவு தொகுதிகள் கிடைக்காது.  பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும்  இடையேதான் போட்டி நடைபெறுகிறது.

காங்கிரஸும், பாஜகவும் விவசாயி களையும், முஸ்லிம்களையும் மறந்து விட்டன. அவர்கள் தான் இந்த நாட்டை  உருவாக்கியவர்கள். நான் சொல்வதைக் கேட்டால் நாட்டில் பண வீக்கம் குறையும்.நமது நாட்டில் அதிக அளவு சர்க்கரை உற்பத்தி உள்ளது. ஆனால் மத்திய அரசு சர்க்கரையையும், கோதுமையையும்  இறக்குமதி செய்கி்றது.  

இந்தத் தவறான கொள்கையால் விவசாயிகள் பலவீனப்படுத்தப் படுகிறார்கள். ஆந்திராவை பிரிப்பதன் மூலம் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும்  பிரிவினைக்கு ஆதரவளிக்கின்றன. இதுவே இரு கட்சி மோதல்களுக்கும் காரணம்.  பாராளுமன்றத்தில்  நடந்த மோதல்களுக்கு இந்த இரு கட்சிகளுமே காரணம் என்று அவர் சிதினார்

Wednesday, February 12, 2014

இதை தவறாமல் படிக்கவும் !

இதை தவறாமல் படிக்கவும் என் ஆயர்குலமே
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய
குடி முல்லை நிலத்து ஆயர்குடி.புதிய கற்கால மக்கள் தமது கால்நடைச்
செல்வத்தை பாதுகாக்க தம்முள் வலிமை மிக்க
ஒருவனைத் தலைவனாக ஏற்றுக்  கொண்டனர்.அத்தலைவனே காலப்போக்கில் அரசனாகவும் ஆனான் என்பது வரலாறு.
நமது இனத்தில் எத்தனையோ மன்னர்கள்  வாழ்ந்தனர்.ஆனால் அவரகளுக்கு கிடைத்த பட்டங்கள் இன்று சாதியாக மாறிவிட்டது
இவர்களில் தலைசிறந்து விழங்கியவர்
ஐயா மாவீரன் அழகுமுத்து கோனார்
வரலாற்றில் சேர்வைகாரர்
என்று அழைக்கப்பட்ட
அழகுமுத்து கோனை தமிகத்தில் வாழும்
ஒரு சில சமுகத்தினர்
வேண்டமேன்றே சேர்வைகாரர் பட்டம் எங்கள்
சாதிக்கே சொந்தமானது என்று எழுதியும்,பேச
ும் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். ஆ்ால்
அது தோல்வியில் முடிந்தது.
தோழ்வியை ஒப்புக்கொள்ளாத அவர்கள்
இன்னும் அழகுமுத்துக்கோனை அவர்கள்
இனையதளத்தில், ஐயா அழகுமுத்து கோன்
எங்கள் குலம் என்றே விளம்பரம் செய்து ,
யாதவர் குலத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள்.இப்படி பொய் விளம்பரத்தால் நாம்
எத்தனையே யாதவ
வீர்ரகளை இழந்து விட்டோம் ,எனவே இனியும்
ஏமாற வேண்டாம். ஆயார்குலமே

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar