"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, October 14, 2015

கல்வெட்டை தெய்வமாக வழிபடும் கிராமத்தினர்: பாரம்பரிய நடைபயணத்தில் ருசிகர தகவல்


கி.பி. 14-ம் நூற்றாண்டை சேர் ந்த பழங்கால கல்வெட்டை கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வருவதாக பாரம்பரிய நடை பயணத்தில் தெரிவிக்கப்பட்டது.

தானம் அறக்கட்டளை சார்பில் மதுரை அருகே யா.கொடிக்குளம் கிராமத்தில் பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பேராசிரியர் வெங்கட்ராமன் கூறியது: மண் சார்ந்த மரபின் வெளிப்பாடாக நாட்டுப்புறத் தெய்வங்கள் திகழ்கின்றன. வெள்ளைச்சாமி, கருப்புச்சாமி, அய்யனார், வீரணன் என பல பெயர்களால் இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். யா. கொடிக்குளத்தில் அமைந்துள்ள பகுதி தூங்காவனம் என்றும், அழகிய மணவாளன் திருநந்தவனம் என்றும் அழைக்கப்பட்டுள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கரையில் அமைந்துள்ள வேதநாராயணப் பெருமாள் கோயிலில் கி.பி. 1308-ம் ஆண்டு குலசேகர பாண்டியனின் அதிகாரி சுந்தரபாண்டிய சோழக் கோனார் என்பவர் திருப்பணி மேற்கொண்டதாக, திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இங்குள்ள இலுப்பையூற்று கிணறுதான் கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்றார்.

ஒருங்கிணைப்பாளர் பாரதி கூறியது: சிவன் கோயிலோடு குலசேகரன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டை கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த பொய்கை பகுதியை பாதுகாப்பதில் தீவிர பங்காற்றி வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்றார்.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar