Recent Posts

"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label இடையர். Show all posts
Showing posts with label இடையர். Show all posts

Monday, January 18, 2016

இலங்கையும்(ஈழம்) இடையர்களும்! ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள்!!

குமரிக்கண்ட கடல் கோள் உருவாகுவதற்கு முன்னரே கடல் கொண்ட அதாவது கடலால் அழிவுற்ற நாடுகளும் ஒன்றாக இருந்த இலங்கையில் வாழ்ந்த மக்களாக ,
நாகர்கள்,
இயக்கர் அதாவது யக்க்ஷர்கள்,
வேடர்கள்,
இடையர்கள்,
அமானுயர்கள்,

என்ற இனங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை அகழ்வாராய்சிகளும் ,அவற்றில் கிடைத்த ஆதார சான்றுகளும், பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் கூறி உள்ள கருத்துக்களும், மெய்பித்தே நிற்கின்றது .இதை உண்மை படுத்த இந்த இனத்தவர்கள் அவர்கள் அறிவுக்கு எட்டியவகையில் எழுதிவைத்த குறிப்புக்கள் ,திட்டம் இட்டு பின் வந்த அரசர்களாலும் அரசியல் ஆளர்களாலும் அந்நிய படை எடுப்பாளர்களாலும் அழிக்கப்பட்டும் சூறை ஆடப்பட்டும் விட்டது எமது துர்அதிஸ்டமே.,,,எஞ்சிய முற்காலத்து தென்னிந்திய மற்றும் ஈழத்தமிழர்களினது குறிப்புக்களும் வரலாற்று நூல்களும் ஜெயவர்த்தனா அரசால் திட்டம் இட்டு யாழ் நூலகம் எரிக்க பட்டபோது அழிந்து விட்டது.

தென்னிந்தியாவில் ஆரம்ப மக்கள் வாழ்ந்த தாக அறியபடுகின்ர அதே காலத்திலேயே ,ஈழத்திலும் மக்கள் வாழ்த்து இருக்கலாம் ஈழத்தின் தெனிந்தியாவுக்கு அண்மித்த அமைவிடத்தை பொறுத்தவரையில் அது சாத்தியமான ஒன்றாகும் ,நாகர்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்தவர் என்பதை துவாரக யுகத்தில் நடந்ததாக கூறும் புனை கதையான மகாபாரதம் கூட நிரூபிக்கவில்லை .மகா பாரதத்தில் கூட நாகலோகத்து நாகர்கள் குந்தி தேவியின் உறவினர்கள் நாகதீபத்தில் வாழ்ந்த தாக தான் அறிய முடிகின்றது .

ஈழத்தில் ஆரம்பத்தில் வாழ்ந்த நாகர்கள் பிற்காலத்தில்அரசர்கள் இராஜ ரட்டை என்று அழைக்க பட்ட ஈழத்தின் வடபகுதிலேயே அதிகமாக வாழ்ந்ததாக கருதப்படுகின்றது .இவர்கள் நாகதீபம் அதாவது யாழ்குடாநாடு கடலால் பிரியும் பூநகரிக்கு மேற்பட்ட பிரதேசம் யாழ் தீபகற்பம் இந்த பிரதேசத்தை 26 குறுநில அரசர்களை கொண்ட நாக அரசர்கள் நீதி தவறாமல் ஆண்டு வந்தார்கள் .இவர்கள் தன்னிறைவு கொண்டவர்காகவும் பண்டமாற்று மூலம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தவர்களாகவும் தங்களுடைய தனித்துவமான நாகரிக ஒழுங்கில் வாழ்ந்தவர்களாகவும் ,உறவுமுறைகளில் திருமண பந்தங்களை முறைப்பெண் திருமணம் ,செய்து வந்து வந்தார்கள் ,இயற்கை வழிபாட்டோடு சேர்ந்த தாந்திரிய சைவத்தின் சிவ சத்தி வழிபாட்டையும் நாக பாம்பினை வழிபடும் மரபினையும் கொண்டு இருந்தார்கள் 


நாகர்கள் பேசும் மொழியாக தமிழ் மொழியை பேசினார்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நிய மொழிகளையும் சகோதர மொழிகளையும் பேசுபவர்களாகவும் இருந்து இருக்கலாம் 

ஆரம்பத்தில் வாழ்ந்த யச்ஷர்கள் இனம் .இவர்கள் மாதோட்டம் எனப்படுகின்ற மன்னார் மேற் பகுதியிலும் அனுராத புரம் போன்ற காடுகளை அழித்து உருவாக்கிய பிரதேசங்களிலும் அந்த பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களிலும் வாழ்ந்தார்கள் .இவர்களும் தனித்துவமான இன அடையாளங்கள் கொண்டவர்கள். இவர்கள் குவேனியின் மூதாதையரின் வம்சத்தினை அரச வம்சமாக கொண்டு இருந்தாலும் ஒரு அரசை ஏற்றுகொள்ளும் மனபாங்கு இல்லாத காரணத்தால் ஈழத்தின் ஏனைய பிரதேசங்களையும் காடுகளையும் அழித்து அப்பிரதேசங்களிலும் தமது வாழ்விடங்கள் ஆக்கினார்கள் இதனால் ஈழத்தின் தென் பகுதியிலும் வாழ்விடங்களை அமைத்து கொண்டார்கள்,இவர்கள் உறவு முறை பந்தங்களில் தனித்துவமான பாரம்பரிய கட்டுபாடுகளை கொண்டு இருக்கவில்லை ,திருமண பந்தங்களில் யாரை வேண்டுமானாலும் மணந்து கொள்ளும் வழக்கத்தில் வாழ்ந்தார்கள் ,இவர்கள் இயற்கை வழிபாட்டோடு சத்தி வழிபாட்டையும் கொண்டு இருந்தார்கள் இவர்கள் ஏலு மொழியையும் தமிழ் மொழியையும் பேசினார்கள் பொருளாதாரத்தை இவர்களும் பண்டமாற்று மூலமும் தன்னிறைவு தொழில்களின் மூலமும் மேம்படுத்தி வாழ்தார்கள்.

இவர்களே அரை மொட்டை அடித்த நிலையில் நாடு கடத்தப்பட்டு வந்த விஜையனுக்கும் 700 தோழர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து ஈழத்தின் அழிவுக்கு உதவினார்கள்

அடுத்து ஆரம்பத்தில் வாழ்த்த குடிகள் ,,வேடர்கள், இடையர்கள் ,இவர்கள் காடுகளிலேயே வேட்டையாடி மர உரி தரித்தவர்களாக வாழ்ந்தார்கள் .இவர்கள் கொடிய விலங்குகளிடம் இருந்து மற்ற இனங்களை காத்தவர்கலாகவும் இருந்தார்கள் ,இவர்கள் பலகாலமாக தங்கள் தனித்துவத்தை இழக்காமலேயே இருந்தார்கள் இவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் ஈழத்தில் காடுகளில் வாழ்கின்றார்கள் இவர்கள் கதிர்காமத்தை அண்டிய காட்டு பகுதிகளில் வாழ்ந்ததாகவும் ,முருகப்பெருமானையும் ,இயற்கை தெய்வங்களையும் வழிபடும் முறையை கொண்டு இருந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ,

ஈழவம்சத்தினர் தாங்கள் தங்களுக்கு உரிய தனித்துவத்தோடு ,தமது தேவைகளில் மற்றவர்களில் தங்கி வாளாமால் தம் நிறைவு செய்து ,தமக்கான நாகரீக ஒழுங்கில் இஷ்ட தெய்வங்களை வணங்கி வாழ்ந்து கொண்டு இருந்த வேளையில் தான் குற்ற தண்டனையாக அரை மொட்டை விஜயன் ,700 தோழர்களுடன் கி .மு 6 ம் நூற்றாண்டு அளவில் கலிங்க நாட்டில் இருந்து மாதோட்டத்தில் வந்து இறங்கினான.

இடையர்களே குமரிகண்டத்தில் வாழ்ந்த பூர்வீக குடிகள் என்பதை காட்டும் கலித்தொகை


"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய
நல்லினத்து ஆயர்”
(கலித். 104)

தொல்குடி மக்களான நல்லினத்து ஆயர்(இடையர்) என்று தங்கள் பூர்வீகத்தைக் கூறுகிறாள் ஒரு ஆயர் மகள்.3 ஆம் ஊழிக்கு முன் இருந்த இவர்கள் குடியினர்,
ஊழியின் காரணமாக தங்கள் இருப்பிடங்கள் கடலுக்குள் முழுகி விடவே,
பாண்டிய அரசனைத் தொடர்ந்து நிலப்பகுதிக்கு வந்தனர் என்பதை
இந்த வரிகள் தெரிவிக்கின்றன.

தன் நாட்டுப் பகுதியைக் கடல் கொண்டது என்பதற்காக அதனை ஈடு கட்டிக்கொள்ள புலி, கெண்டை பொறித்த சோழர் சேரர் நாட்டுப் பகுதியைக் கைப்பற்றிக் தன் கெண்டைமீனைப் பொறித்துக்கொண்டவன் 'வாடாச் சீர்த் தென்னவன்'. நல்லினத்து ஆயர் (பசு வளர்க்கும் ஆயர்) அந்தத் தென்னவன் குடியில் பிறந்தவர்களாம். (கலித்தொகை 104)- நல்லுருத்திரனார்

குமரிகண்டத்தின் ஒருங்கினைந்த பகுதியே ஈழம்(இலங்கை) ஆகும்


Friday, November 27, 2015

முல்லைக்கலி – 104வது பாடல்


இப்பாடலில் ஒரு வரலாற்றுச் செய்தி வருகிறது. தமிழகத்தில் பல கடல்கோள்கள் நிகழ்ந்தன. அதனால்தான் ஒல்காப் பெரும்புகழ் கொண்ட தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பல செறிவு நிரம்பிய இலக்கியங்கள் அழிந்து விட்டன. தமிழின் தொன்மை ஏறத்தாழ கி.மு. ஐந்தாயிரம் எனக் குறிக்கிறார் முதுபெரும் அறிஞர் முனைவர். ச.வே. சுப்பிரமணியம் அவர்கள். கடல்கோள் நிகழ்ந்ததற்குச் சான்றாக 104 ஆவது முல்லைக்கலிப் பாடல் விளங்குகிறது. அக்கருத்து இதுதான். “தென் மதுரையும் கபாடபுரமும் கடலால் கொள்ளப்பட்ட காரணத்தால் பாண்டிய அரசன் சோழ நாட்டுப் பகுதியையும் பாண்டிய நாட்டுடன் 
tamil suvadikal
இணைத்துக் கொள்கிறான். இப்பாடலைப் பாடியவன் இவ்வரலாற்றுச் செய்தியைப் பதிவு செய்தவன் சோழன் நல்லுருத்திரன். கடலின் மிகுந்த அலைகள் தன் நாட்டினுள் புகுந்து கைக்கொண்டு (பாண்டி நாட்டினுள்) விடுதலால், தன் நாட்டின் பரப்பை பரப்பளவைக் கூட்டவேண்டி மனத்தில் இளைப்பின்றி பகைவரைத் (சேரனையும், சோழனையும்) தன் வலிமையால் வென்று மேலே சென்று சோழனின் புலி இலச்சினையையும், சேரனின் வில் இலச்சினையையும் அழித்து, விளங்கும் மீன் இலச்சினையை அங்கே பொறித்த புகழையுடைய பாண்டியனின் பழைய புகழை நிலைபெறச் செய்த குடியுடன் தோன்றிய முல்லை நிலத்தில் வாழும் ஆயர் (இடையர் குலத்தினர்) என்ற கருத்தில் பாண்டியனின் சிறப்புக் கூறப் படுகிறது.


அப்பாடல் வரிகள்

மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல் வௌவலின்
serasozhapandiyar
மெலிவின்றி, மெலிவின்றி மேல் சென்று மேவார்நாடு இடம்பட
புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
தொல்இசை நட்ட குடியொடு தோன்றிய
நல்லினத்து ஆயர் ….

எனத் தொடரும் இப்பாடல் 80 வரிகளைக் கொண்டது.


“மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல்வௌவலின்
………………..
ஒருமொழி கொள்க, இவ்வுலகுடன் எனவே” எனும் வரி முடிய உள்ள இப்பாடல், பல்வேறு செய்திகளை உள்ளடக்கியது.

விளக்கம்


தலைவி ஒருவனை விரும்ப அவன் ஏறு தழுவினான். அக்காட்சியைத் தோழி தலைவிக்குக் காட்டினாள். பின் தலைவியின் சுற்றத்தார் அவனுக்கே தன் மகளை மணம் செய்துதர இசைந்தனர். பொதுவாக முல்லைக்கலிப் பாடல், காளைகளைப் பிடித்து அடக்கும் இளைஞர்களுக்கே தம் மகளை மணம் செய்து கொடுத்து இல்லறம் நடத்த இசைவர் எனும் செய்தியை விளக்குவதாகவே உள்ளது. காடும் காடுசார்ந்த இடம் முல்லை. அதில் ஆயர்குல மக்கள் வாழ்வர். அவர்கள் காளையை வென்ற இளைஞர்களுக்குத் தம் மகளை மணம் செய்து கொடுப்பது முல்லை நில ஒழுக்கம். இல்லறத்தில் நிலைபெற்று இருத்தலும், இருத்தல் நிமித்தமும் உரிப்பொருள்.
thamizharivom eruthazuval

இப்பாடலில்,

பால்நிற வண்ணன் கண்ணனின் அண்ணன் பலதேவன். அவன் பால் போல் வெண்ணிற மேனியன். நேமித் திருமார்பன் எனப்படும் சக்கரத்தை உடைய திருமால் பிறைநுதல் முக்கண்ணன் எனும் நெற்றிக்கண் உடைய முக்கட் பெருமானாம் சிவ பெருமான் ஏறும் வெள்ளையேறாகிய (ஏறு – காளை) காளையை அடக்கும் முல்லை நில ஆயர்குல வீரன். செட்டிநாட்டில் மஞ்சுவிரட்டுத் தொழு என்பர். இச்சொல், “தொழுவினுள் கொண்ட ஏறு எலாம்” எனத் தொழுவினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காளைகளைக் குறிக்கிறது. மேகத்தை விரட்ட நடத்தப்படும் மாடுகளை ஓடிப்பிடித்து ஏறி அடக்கும் விளையாட்டு மஞ்சுவிரட்டு. அதனை ஜல்லிக்கட்டு என்பர். இவ்விளையாட்டுக்குத் தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது. முல்லைக்கலிப் பாடல் முழுவதையும் படிக்கச் சுவையாக இருக்கும். படிப்பீர்… சுவைப்பீர்.

Sunday, November 22, 2015

சோழர் காலத்துக்கோயிலும் சமூகமும்'' நூல் ஆய்வு(கோயிலும் இடையர் சமூகமும்)

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை முதுநிலை விரிவுரையாளராகிய முனைவர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் கோயிற்கலை, பண்பாடு, கல்வெட்டு, நாட்டாரியல் ஆகிய துறைகளில் கொண்டிருந்த ஈடுபாட்டின் பிரதிபலிப்பாக ஐம்பதுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பல ஆய்வுத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்நூலாசிரியரின் ஆய்வு முறையில் தமிழாய்வு, வரலாற்றாய்வு என்பதனை விடவும் சமூகவியல், நாட்டாரியல் ஆய்வுக்கூறுகள் ஆங்காங்கே மேலெழுந்துள்ளன. இத்தகைய துறைகளின் பால் புலமைத்துவம் பெற்றவராகிய முனைவர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் ""சோழர் காலத்துக்கோயிலும் சமூகமும்'' என்னும் நூலைத் தந்துள்ளார்.


கோயில்கள் பற்றிய ஆய்வுகள் நிறைய இதுவரை செய்யப்பட்டுள்ளன ஆயினும் பெரும்பாலும் அவ்வாய்வுகள் கோயில்களை ஒரு சமய நிறுவனம் அல்லது கட்டிடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் நிலைக்களம் என்றே நோக்கியுள்ளன. அதற்கு மாறாக வ. மகேஸ்வரன் கோயிலை ஒரு சமூக நிறுவனம் என்ற நோக்கில் ஆராய்ந்து பல புதிய உண்மைகளை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கோயிலுக்கும் அரசுக்கும் இருந்த தொடர்பு கோயில் நடவடிக்கைகளில் இடையர் மற்றும் பெண்களின் பங்களிப்பு மற்றும் கோயில் நிருவாகத்தில் உள்ளூர் சமூகத்தின் பங்கு ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார் என்று நூலுக்கு அணிந்துரை நல்கிய தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வு நிலைப்பேராசிரியர் ஏ.சுப்பராயலு தெரிவித்துள்ளார்.


தமிழ் சமூகத்தில் கோயில் உருவாக்கம், சோழர் காலத்தில் கோயில்கள், கோயிலும் பெண்களும், கோயிலும் இடையர் சமூகமும், கோயிலும் நிருவாக மாற்றங்களும் ஆகிய ஐந்து இயல்களில் தமது ஆய்வினை மேற்கொண்டு இந்நூலை ஆசிரியர் யாத்துள்ளார். காவிரியின் வளமை கொழிக்கும் திருவாரூர், திருவையாறு,திருவிசலூர், வேதாரண்யம், திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளிலிருந்து கல்வெட்டுத் தரவுகளை ஆராய்ந்து சில முடிகளை இந்நூலில் முன்வைத்துள்ளார். தமிழகத்தில் கோயில் கட்டட மரபின் வரலாற்றை இலக்கியத் தரவுகளோடு தொல்லியல் தரும் செய்திகளையும் பயன்படுத்தி நிரல்படச் சொல்லியுள்ளார்.மக்கள் பரவலாகப் போற்றிவந்த கிராமத் தெய்வங்கள், குறிப்பாக பிடாரிபோன்ற பெண் தெய்வங்கள் நாளடைவில் பல்லவ, சோழ அரச குலங்களால் போற்றப்பட்ட பெருந்தெய்வக் கோயில்களால் பின்தள்ளப்பட்டன என்பதையும் இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய நோக்கில் பெருந்தெய்வக்கோயில்களின் அதிகாரமும் செல்வாக்கும் புலப்படுகிறது.தமிழர் சமூகத்தில் கோயில் என்ற அமைப்பின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் என்ற கருத்தியலை முறைப்படுத்துவதாகவே முதலாவது இயல் அமைகின்றது.


வழிபாடுகள் எவ்வெவ் வகையில் உருவாகி வளர்ந்தன என்பதும், கோயில் என்ற அமைப்பு அவ்வழிபாட்டின் தொடர் விளைவாக எவ்வாறு ஏற்பட்டது என்பதும் தொல்லியல் இலக்கியச் சான்றுகளால் விளக்கப்படுகின்றது. இவ்வியலில் பக்தி இயக்கச் செயற்பாடுளால் கோயில் முறைமை வளர்ச்சியடைந்ததும், கோயில் கட்டுமானங்கள் தொடர்பான கருத்து நிலைகள் பெறும் செல்வாக்கும் விவரிக்கப்படுகின்றது.


வரலாற்றுக்காலம் முதல் பல்லவ, பாண்டிய இறுதிக்காலம் வரை வளர்ந்து வந்த கோயில் முறைமை எவ்வாறான பின்புலங்களினூடாக சோழர் காலத்தில் வளர்ச்சி பெற்றதென்பது இரண்டாம் இயலில் ஆராயப்படுகின்றது. தொன்று தொட்டு நிலவி வந்த மரபும், பக்தி இயக்கமும் வளர்த்தெடுத்த பின்புலத்தினூடாக சோழர் காலக்கோயில் கட்டுமானப்பனிகள் அரசகுலத்தவராலும், ஏனையோராலும் எவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்டன என்பதும் அதன் ஆரம்ப இடைக்கால வேகமும் பிற்காலத்தில் ஏற்பட்ட தேக்கநிலையும் அதற்கான காரணங்களும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. மேலும் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசுக் கோயில்கள் என்பவற்றின் கருத்தியல் அவற்றின் இயங்குதளம், செயற்பாடுகள் என்பனவற்றிலும் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. இவ்வியலின் இன்னோர் பகுதியாக அக்காலத்தில் நிலவிய கிராமியக் கடவுள் கோயில்கள் பற்றி ஆங்காங்கே தெரியவரும் செய்திகள் தொகுத்து ஆராயப்படுகின்றன.


கோயில் என்ற நிறுவனத்தில் பெண்கள் எல்லாவற்றிலும் கொண்டிருந்த தொடர்புகள் பற்றியதான செய்திகள் மூன்றாம் இயலில் கூறப்பட்டுள்ளது. அரசியல், குறுநிலமன்னர்களது மனைவியர், பிராமணப்பெண்டிர், வேளத்துப்பெண்டிர், வெள்ளாட்டிகள், தேவரடியார் என அவர்களை இனப்பிரித்து இவ்வியலில் ஆராயப்படுகின்றது. இத்தகைய பெண்களது கோயிலுடனான தொடர்பை அரசியல்பலம், அரசியல் உறவு, பொருளாதார பலம், சமூகமேன்மை முதலானவை எவ்வாறு கட்டமைந்தன என்பது பற்றி நோக்குவதாகவும் இவ்வியல் அமைந்துள்ளது. தேவரடியார் சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி என்பன வெட்டுமுகப் பார்வையினடியாக நோக்கப்பட்டு இவர்கள் கலையின் பிரதிநிதிகளாகக் கோயிலினுள் சேர்க்கப்பட்டார்களா, அல்லது அரச நிர்வாகம் அதனைத் தீர்மானித்ததா என்பது பற்றிய நோக்கும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மொத்தக் கோயிற் கொடைகளில் பெண் பரவலும் அதற்கான செயல்முறைக்காரணிகளும் இவ்வியலின் கண் நூலாசிரியரின் தெளிவான பார்வை விழுந்துள்ளமை புலனாகின்றது.


கோயில்களில் அன்றாடம் விளக்கெரிப்பதற்குத் தேவையான நெய்யை வழங்குவதற்கான பண்டமாற்றுச் சேவை ஒன்றை அவர்கள் நிகழ்த்தி வந்துள்ளனர். அவ்வாறான சேவை பற்றியும், அதை நிகழ்த்திய இடையர் சமூகம் பற்றியுமே இவ்வியலில் ஆராயப்படுகின்றது. கோயில்களில் விளக்கேற்றுதல் அத்தியாவசியமான மரபாக வளர்ச்சி பெற்றது. கோயில் கட்டுமானங்கள் நிலையானவையாக உருவானபோது வழிபாட்டின் சின்னமாகவும்,கோயிலின் அக இருளை நீக்கும் கருவியாகவும் இது விளங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இடையர்கள் பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் காணப்பட்டபோதும் அவர்களின் வாழிடங்கள் பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைத்துள்ளன. எனினும் இடையர் பற்றிய தஞ்சாவூர்க் கல்வெட்டின் மூலம் சோழமண்டலத்தின் பல பகுதிகளிலும் அவர்கள் பரந்து வாழ்ந்த செய்தியினை அறிய முடிகின்றது.


நாகரிக வளர்ச்சி காரணமாகவும் அரசுகளின் தோற்றங்களாலும் அவ்வரசுகளின் சமயஞ்சார்ந்த செயற்பாடுகளினாலும் ஒருங்கிணைந்த அமைப்பாகக் கோயில் என மாறியபோது அது சமூக நிறுவனமாகவும் உருவானது. இவ்வாறான உருமாற்றங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய நிறுவனங்களாக இடைக்காலத் தமிழகத்துக் கோயில்கள் விளங்கின. கோயில் நிருவாகிகளைத் தனத்தார் என்று குறிப்பிடும் வழக்கம் சோழர் காலத்தின் இறுதிப்பகுதியிலேதான் ஏற்பட்டுள்ளது. கோயில் நிவந்தங்களுக்கு என்று அமர்த்தப்பட்டவர்கள் பல பணி நிவந்தரக்காரர் ஆவர். தேவர் இடைச்சான்றார் ஆடுகளைப் பெற்று அவற்றிற்காக நெய்யால் விளக்கெரிக்கும் கடமையைச் செய்தனர். பிரõமணக்குழுக்களுக்குப் புறம்மாக வணிகர் முதலான பிறசாதியினரும் கோயிற் நிருவாகப் பணிக்குழுக்களாக இயங்கியதற்கு இவை சான்றுகளாகும்.காலநிதி, வல்லிபுரம் மகேஸ்வரனால் எழுதப்பட்ட இந்த நூல் சமூகம் பற்றிச் செல்லும் நிலைப்பாட்டைப் பார்க்கும்போது சாதிய வித்தியாசங்கள், ஏற்றத்தாழ்வுகள், புறக்கணிப்புக்கள் என்பன இருந்துள்ளமை வெளிப்படை. கோயில் நிர்வாகிகளாகிய தனத்தார் மற்றும் கோயில் பூசகர்களாகிய பிராமணர்கள் மற்றைய சாதிப்பிரிவுகளுக்குள் உள்பட்ட மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்கள் என்பதை இந்நூல் நேரடியாகச் சுட்டிக்காட்டாவிட்டாலும் மறைமுகமாக அவர்களின் தொழில்சார்ந்த முறையில் பின்தள்ளப்பட்டிருப்பதை இயம்பியுள்ளது.சோழர் காலத்தில் மட்டுமல்ல இந்தியõவைப் பொறுத்தளவில் இது நீண்ட தொடராகவே இன்றும் இருந்து வருகின்றது.


இந்நூலை பல ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் பயனுள்ள கருத்தக்கருவூலமாகக்கொண்டு வந்த கலாநிதி வ. மகேஸ்வரனுக்கு சென்னை சேக்கிழார் ஆராய்ச்சிமையம் அண்மையில் சிறந்த நூல் பரிசினை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளது. இது அவரது ஆராய்ச்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்பது புலனாகின்றது. ஈழத்து ஆராய்ச்சியாளர்கள் வரிசையிலே இன்றைய காலகட்டத்தில், தமிழ்துறை விரிவுரையாளர் கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் முன்நிற்கிறார்கள்.
க. உயிரவன்
அறிவே ஆண்டவன்
thamilaali@gmail.com

Monday, October 26, 2015

ஆற்றிலே வந்த அம்மன்

ஒருகாலத்தில் வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருந்த தேனாற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன்தான் தேனாற்று அம்மன்.

பிள்ளையார்பட்டியைத் தழுவி நிற்கும் சிராவயல் புதூர் கிராமம், மஞ்சு விரட்டுக்குப் புகழ்பெற்றது. இவ்வூரில்தான் இருக்கும் திருத்தலம் தேனாட்சியம்மன் கோயில். சிராவயல் புதூரைச் சேர்ந்த இடையர் குலத்து பெண் ஒருவர், தினமும் தலைச் சுமையாய் மோர்ப் பானையைத் தூக்கிச் சென்று அக்கம் பக்கத்து ஊர்களில் மோர் விற்றுவிட்டு வருவார். திரும்பி வருகிறபோது மோர்ப்பானை, உழக்கு, கரண்டி இவற்றை தேனாற்றில் கழுவி எடுத்துச் செல்வது அவரது வாடிக்கை.

ஒருநாள் அப்படி பானையைக் கழுவிக்கொண்டிருந்தபோது ஆற்றுக்குள் மார்பளவு தண்ணீரில் அம்மன் சிலை ஒன்று நிற்பதைக் கண்டார். பக்திப் பரவசத்தில் கைகூப்பி அம்மனை வனங்கியவர், ஊருக்குள் ஓடினார். ஊரார் வரும்வரை அப்படியே அம்மன் சிலை நின்றதாக நம்பப்படுகிறது. ஆற்றுக்குள் இருந்த அம்மன் சிலையைக் கரைக்குக் கொண்டு வந்தவர்கள் பின்னர் அம்மன் வழிகாட்டுதல்படியே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பிரதிஷ்டை செய்தனர்.

சேவை செய்த இடையர் குலப்பெண்

தேனாற்றில் கண்டெடுத்த தெய்வம் என்பதால் அம் மனுக்கு ‘தேனாற்று நாச்சி’ என்று பெயர் சூட்டினார்கள். பிறகு அதுவே தேனாட்சியம்மனாக மருவியது. அந்தக் கோயிலைச் சுற்றி குட்டியாய் இரு கிராமம் உருவானது. அது அம்மன் பெயராலேயே தேனாட்சியம்மன் கோயில் என்றானது. அம்மனைக் கண்டெடுத்த இடையர் குலப்பெண், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அம்மனே கதி என்று கிடந்தார். உணவு, உறக்கம் மறந்து அம்மனே பித்தாகக் கிடந்து முக்தியடைந்தார். அதன் பிறகு, அம்மனுக்கு எதிரே இடையர் குலப் பெண்ணுக்கும் சிலை வைத்த மக்கள், அதை இடைச்சி அம்மனாக வழிபடத் தொடங்கினார்கள்.

சித்ரா பவுர்ணமி

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியின்போது பூச்சொரிதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட வைபவங்கள் அம்மனுக்கு அதிவிமர்சையாக நடைபெறுகின்றன. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை அம்மனுக்குப் பத்து நாள் செவ்வாய் திருவிழாவும் நடக்கிறது.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar