Recent Posts

"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label யாதவ மகாசபை. Show all posts
Showing posts with label யாதவ மகாசபை. Show all posts

Saturday, January 23, 2016

கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் யாதவ மகாசபை பொதுச்செயலாளர் பேட்டி

பரமக்குடியில் யாதவ சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று யாதவ மகாசபை பொதுச்செயலாளர் பேட்டிஅளித்தார்.

ஆலோசனைகூட்டம்

பரமக்குடியில் யாதவ மகாசபையின் ராமநாதபுரம் மாவட்ட ஆலோசனைகூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணாஇளம்பரிதி தலைமை தாங்கினார். தென்னவனூர் சந்திரன் முன்னிலைவகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் வேலுமனோகரன் மற்றும் சண்முகராஜ், செந்தாமரைகண்ணன், பரமக்குடி யாதவர் சங்க தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்ட பொறுப்பாளர் ஹரிகரன், யாதவ சபை மாவட்ட பொறுப்பாளர் இளங்கோவன் உள்பட பலர் பேசினர். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


பின்னர் தமிழ்நாடு யாதவ மகாசபையின் பொதுச்செயலாளர் தர்மலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழ்நாட்டில் யாதவ மகாசபை நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. யாதவ சமுதாயத்துக்கு கொடுக்கவேண்டிய அரசியல் அங்கீகாரத்தை அ.தி.மு.க.,தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழங்குவதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குகளை பெற வருகின்றனர். வெற்றிபெற்ற பின்னர் கண்டுகொள்வதில்லை. 1931–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் 4–வது சமுதாயமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் பேர் உள்ளோம்.


அரசு விழா

வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்கவேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். தமிழகத்தில் நீதிபதிகள் நியமனத்தில் யாதவ சமுதாய மக்களுக்கு பங்களிப்பு இல்லாமல் உள்ளது. வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்று கட்சிகள் அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது சட்டஆலோசகர் சதீஷ்வரன்,வக்கீல் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்

Saturday, May 16, 2015

தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு யாதவ மகாசபை நிதி உதவி

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் தனது சொந்த நிதியிலிருந்து ஒருலட்சத்து அறுபத்துஓராயிரத்தை (1,61,000) இன்று நெல்லையில் பொன்னையா யாதவ் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார் .திருநெல்வேலி மாவட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர் .

Sunday, March 1, 2015

ஆட்டோ டிரைவர் கொலையில் அலச்சியம்:யாதவ மகா சபை

ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்:                                                                                              

கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு அரசு ரூ. 50 லட்சம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தி. தேவநாதன் யாதவ் வலியுறுத்தினார்.
திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டோ ஓட்டுநர் பொன்னையா (24), பிப். 25 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து, 3 தினங்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பொன்னையா குடும்பத்தினரை தேவநாதன் யாதவ் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் போலீஸார் கவனம் செலுத்தாமல் பிற பணிகளில் ஈடுபடுகின்றனர். தச்சநல்லூரில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பான பிரச்னை குறித்து 2 தினங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொன்னையா கொலை செய்யப்பட்டார்.

இக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக அங்குள்ள காவல் ஆய்வாளரை சேர்க்க வேண்டும். காவல் ஆய்வாளர், உதவி ஆணையர் இருவர் மீதும் மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்படும்.

உழைக்கும் பருவத்தில் பொன்னையா கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே அவரது குடும்பத்திற்கு அரசு ரூ. 50 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். தச்சநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது. அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றார் அவர்.

பேட்டியின்போது, தென்மண்டல அமைப்புச் செயலர் மரியசுந்தரம் யாதவ், திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளர் முத்து, மாவட்டச் செயலர் சரவணன், இளைஞரணி நிர்வாகி சுந்தர், மாநில எஸ்.டி, எஸ்.சி செயலர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.Thursday, February 26, 2015

நெல்லை பொன்னையா யாதவை படுகொலை செய்தவர்களை கைது செய்ய கோரி யாதவ மகாசபை முதல்வருக்கு கடிதம்

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் தேநீர்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த பொன்னையா யாதவ் வயது 25, த.பெ.செல்லையா. 25.2.2015 அன்று காலை நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ்சாலை தனியார் மருத்துவமனை அருகே வந்த பொன்னையாவை 4 பேர் கொண்ட கும்பல் வாகனத்தில் வந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், படுகொலை செய்யப்பட்ட ஏழை ஆட்டோ ஓட்டுனர் பொன்னையாவின் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க கோரியும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு ஆயர்குலத் தலைவன் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.
Tuesday, January 7, 2014

தமிழக அரசுக்கு யாதவ மகாசபை கோரிக்கை

தமிழக அரசுக்கு யாதவ மகாசபை கோரிக்கை 

யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை
அதில் கூறியுள்ளவை

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வண்க்கம்,


            யாதவ மகாசபை சார்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மாவட்டம், நகரம்,ஓன்றியம், கிளை என பட்டி, தொட்டியெல்லாம் யாதவர்களை  யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பல்வேறு மாநாடு, பேரணி, கூட்டங்கள் நடத்தி கொண்டிருக்கிறோம் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சென்னை மன்ரோ சிலை அருகிலிருந்து பேரணியும், 25.04.2010 நெல்லையில் மாநில மாநாடும், 21.08.2010 சென்னையில் பேரணியும், 30.01.2011 சென்னை ராயபேட்டையில் மாநில மாநாடும், 25.04.2012  சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தியுள்ளோம்.

மெலும் யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டுயலில் சேர்க்க கோரி லட்சக்கணக்கனா யாதவர்களின் கையெழுத்தை பெறும் இயக்கமும் நடத்தப்பட்டது. எங்களது கோரிக்கையை நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் கடந்த ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை என்பது வரலாற்று உண்மை.

தங்களது ஆட்சிக்காலத்தில் தான் யாதவ குல முதலி சுத்ந்திரப் போர் வீரன்
அழகுமுத்துக் கோனுக்கு சென்னையில் சிலை வைத்ததும், போக்குவரத்து கழகத்துக்கு பேர் வைத்து பெருமை சேர்த்ததை நாங்கள் அறிவோம்

சமுக நீதி காத்த வீராங்கை என்ற பட்டத்திற்கு ஏற்றபடி யாதவைகளின் வாழ்வாதரத்தை உயர்த்தும் வகையில் யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க ஆவண செய்ய வேண்டுகிறோம் அல்லது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீட்டாக ஏழு சதவீதம் யாதவர்களுக்கு ஒதுக்குமாறு யாதவர்கள் இந்த ஒற்றை கோரிக்கையை முன்வைக்கிறோம்Wednesday, October 16, 2013

பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி யாதவ மகாசபை தலைவர் தேவநாதன்

               நெல்லை:  வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன் பேசினார்.
                    அழகுமுத்து கோன் 254 குருபூஜை தினத்தை முன்னிட்டு பாளையில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன் பேசியதாவது: யாதவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்புகளில் உரிய முன்னுரிமை, உரிய இடஒதுக் கீடு கேட்டு நாங்கள் போராடி வருகிறோம்.

                 அரசியல் கட்சிகள் அனைத்தும் யாதவர்களை புறக்கணித்து வருகின்றன. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் நமது கட்சியான இந்திய மக்கள் கழகம் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். மத்தியில் ஆளும் காங்கிரசின் அரசின் நிர் வாக திறமையின்மையால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இப்போதைய நிலையில் நாட்டின் பிரதமராக முலாயம் சிங் யாதவிற்கு தகுதி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

            பொதுக்கூட்டத்தில் தென்மண்டல அமைப்பு செயலா ளர் மரியசுந்தரம், இணை செயலாளர் வல்லநாடு முத்து, மாநில இளைஞரணி செயலாளர் சுந்தரம், மாவட்ட தலைவர் மாடசாமி, யாதவ பண்பாட்டு கழக நிறுவன தலைவர் ராமகிருஷ்ணன், மாநகர துணை செயலாளர் தளவாய் மணி, நிர்வாகிகள் செந்தில், அப்பாஸ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக கட்டாலங்குளத்தில் நடந்த குருபூஜை விழாவில் தேவநாதன் கலந்து கொண்டார்.

Thursday, October 10, 2013

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின்  அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை  அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.  ஆனால், நாளடைவில் நால்வகை நிலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் அந்த எருது விளையாட்டு பழகிப்போனதுதான் வேடிக்கை. அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை  (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால்  ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிஞ்சி நிலத்தவரும் நெய்தல் நிலத்தவரும் ஏறு  தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் பொதுப்பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது. 

ஸ்பெயின் உள்ளிட்ட  உலகின் சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவை விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்விய லின் வெளிப்பாடாக விளங்கவில்லை. முற்காலத்தில் மாட்டின் கழுத்தில் புளியம் விளாறை சுற்றியிருப்பார்கள். இதை சல்லி என்பர். பிற்காலத்தில் மாட்டின் கொம்புகளில் பரிசுக்காக காசு களை கட்டியிருப்பர். இதை ஜல்லி என்பர். கழுத்தில் கட்டிய மணிகளை வைத்தோ, கொம்புகளில் கட்டிய பரிசுப்பணத்தை வைத்தோ சல்லிக்கட்டு  அல்லது ஜல்லிக்கட்டு என பிற்காலத்தில் பெயர் பெற்றாலும் ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, எருதுப்பிடி போன்றவையே இந்த விளையாட்டின் முந் தைய பெயர்கள். 

 பறையில் தண்ணுமை முழக்கம் எழுப்பி தொழுவில் அடைபட்ட காளையை திறந்துவிட்டு, மல்லல் மைதானத்தில் காளையர்கள் மோதிப்பிடிப்பது  தான் 
பொதுவான வழக்கம். ஆனால், தமிழகத்தின் தென், மத்திய மாவட்டங்களில் தான் இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. வட மாவட்டங்களில் காளையின் கழுத்தில் கயிறு கட்டி இருபுறமும் பலர் நின்று பிடித்துக்கொள்ள அதை அடக்கி கொம்பில் கட்டிய பரிசுப்பணத்தை கவர காளையர்கள் முயல்கின்றனர். 

தென் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீப காலம் வரை கோயில் காளைகளையும் வீட்டில் வளர்க்கும் காளைகளையும் பரிசுப் பொருட்களை கட்டி தெருவில் விடும் வழக்கம் இருந்தது. ஊரார் வழிநெடுக நின்று  அதை அடக்க முயல்வார்கள். ஈழத்து மக்களிடையே பட்டிப்பிடி  விளையாட்டு வழக்கமுள்ளது. இதன்படி பட்டிகளில் அடைக்கப்பட்ட மாடுகளின் கழுத்தில் வடை, பனியாரம் போன்ற உணவுப்பண்டங்களை ஆரமாக  கட்டிவிடுவர். அவற்றை பட்டிக்கு வெளியே கொழுக்கம்புகளுடன் நிற்கும் இளைஞர்கள் இழுத்துக்கொள்கின்றனர். 

வீரத்தை கூட்டும் குரவை கூத்து

அக்காலத்தில் ஏறு தழுவும் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் மாலையிலோ, பிந்தைய நாள் மாலையிலோ குரவை கூத்து நடக்கும். இதில் ஆயர் குல  ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவர். ஆயர் கன்னியர் பாடும் பாடல் ஏறு தழுவப்போகும் தன் காதலனை உசுப்புவது போலவோ, ஏறு த ழுவி வென்றவனை புகழ்வது போலவோ அமைந்திருக்கும்.

வீரத்தின் அடையாளம்

இயற்கை இன்னல்கள், கஷ்ட, நஷ்டங்கள், வறுமை, செழிப்பு என அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழ வனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கே பறை சாற்றும் மகத்தான திருநாள் தைப்பொங்கல். தங்கள் நிலங்களில் விளைந்த நெல், கரும்பு, மஞ்சள் போன்றவைகளைகளுடன் புத்தரிசியில் சர்க்கரை பொங்கல் வைத்து இயற்கையுடன் சூரியனையும் வழிபடுவது வழக்கம். தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழர்களின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டும் முரட்டுக்காளையை  அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு,  வடமாடு விரட்டு போன்ற வீரவிளையாட்டுக்கள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத் தப்படுகிறது. 

Monday, August 26, 2013

யாதவ மகாசபை

யாதவ மகாசபை என்பது உலக அளவில் தமிழ் பேசும் யாதவர்களின்(கோனார) சமுதாய அமைப்பாக உள்ளது.இந்த அமைப்பின் தலைவராக திரு.தி தேவநாதன் யாதவ் உள்ளார்.இந்த அமைப்பின் முதல் மாநாடு நெல்லையில் வீரன் அழகுமுத்து கோன் சிலை திறப்புடன் தொடங்கியது.
                 நெல்லையில் திறக்கப்பட்ட வீரன் அழகுமுத்து கோன் சிலை


இந்த அமைப்பின் இரண்டாவது மாநாடு சென்னையில் 30-01-2011 அன்று
  யாதவர் வாழ்வுரிமை மீட்பு என்ற பெயரில் நடைபெற்றது.
யாதவ மகாசபையில் பிரதான கோரிக்கைகளாக அரசியல் அதிகாரம் யாதவர்களுக்கு மிகவும் பிற்படுத்த பட்டியலில் இடம்(MBC)இதற்காக பல்வேறு போராட்டங்களை இந்த அமைப்பு முன் நின்று நடத்தி வருகிறது
இந்த மாநாட்டில் உலக முழுவதும் இருந்து பல லட்சம் யாதவர்கள் சொந்தங்கள் கலந்து கொண்டார்கள்

  யாதவ மகாசபை சார்பிதுல் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மாவட்டம், நகரம்,ஓன்றியம், கிளை என பட்டி, தொட்டியெல்லாம் யாதவர்களை  யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பல்வேறு மாநாடு, பேரணி, கூட்டங்கள் நடத்தி கொண்டிருக்கிறோம் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சென்னை மன்ரோ சிலை அருகிலிருந்து பேரணியும், 25.04.2010 நெல்லையில் மாநில மாநாடும், 21.08.2010 சென்னையில் பேரணியும், 30.01.2011 சென்னை ராயபேட்டையில் மாநில மாநாடும், 25.04.2012  சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தியது

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar