"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Thursday, March 5, 2015

மருது பாண்டியர் வாழ்வின் நிகழ்வுகள்-ராமுக்கோன்,ஆட்டு மந்தையின் காவல்

மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட காளையார்கோவிலில் வருடந்தோறும் நடக்கும் திருவிழாவில் யாதவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. அன்றைய நாள் முழுவதும் கோவில் யாதவர்களின் கட்டுபாட்டில் இருக்கும். மாட்டுவண்டி பந்தயம் குதிரை பந்தயம் நடக்கும். இரவு முழுவதும் கலை நிகழ்ச்சி நடக்கும். அன்றைய நாள் சிவகங்கை மாவட்ட யாதவர்கள் அனைவரும் அங்கு கூடியிருப்பார்கள்.
சிவகங்கை சீமையின் பாளையக்காரர் மருதுபாண்டியர்களின் படையில் வீரனாக இருந்தவர் ராமுக்கோன். உருவாட்டி அருகே அம்பலார் ஒருவர் ஆட்டு மந்தை வைத்துளார்.
அவரின் மந்தையில் தினமும் ஒரு ஆடு காணாமல் போய்விடுமாம் அம்பலாரால் எப்படி காணாமல் போகிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் அவர் மருதுபாண்டியரை சந்தித்து முறையிட்டார்.மருதுபாண்டியர் உடனே அம்பலாரே கவலைவேண்டாம் கோனாரை அனுப்புகிறேன் போய்வாருங்கள் என்றார். அன்று இரவு கோனார் அவர்கள் ஆட்டு மந்தையில் காவலில் இருந்தார். திடீரென்று ஒரு கரடி ஆட்டை தாக்கியது உடனே கோனார் சீறி பாய்ந்து கரடியிடம் சண்டையிட்டு அதனின் தலையை வெட்டி எடுத்தார். மருதுபாண்டியரிடம் சென்று இந்த மிருகம்தான் ஆட்டை பிடித்து உண்கிறது என்றார். மருதுபாண்டியர் மிரன்டு போனார். கரடியின் தலையை வெட்டி எடுத்து வந்து சாதாரணமாக சொல்கிறாரே என்று கோனாரை பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் கட்டிய காளையார்கோயிலில் இராஜகோபுரத்துக்கு முன்பு கரடி தலையுடன் கூடிய ராமுக்கோன் சிலையை நிருவினார். அந்த சிலை இன்றும் உள்ளது

Wednesday, March 4, 2015

குருசாமி யாதவ் அவர்கள் பிறந்தநாள் விழாவில் கோகுலம் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் & இரத்ததானம்

கோகுலம் அறக்கட்டளை சார்பில் குருசாமி யாதவ் 50வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடந்தது .இம்முகாமில் டாக்டர்.கமலவாசன் குழுவினர் இரத்தத்தை சேகரித்தனர். இம்முகாமில் 30க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோகுலம் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.















கோகுலம் அறக்கட்டளை  மாவீரன் குருசாமி யாதவ் பிறந்தநாள் விழா

நன்றி
திரு மணிவண்னன் யாதவ்
தமிழ் நாடு இளைஞர் யாதவ மகாசபை

சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளத்தில் இரத்த தான முகாமிற்கு காவல் காவல்துறை அனுமதி மறுப்பு

பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம்

"சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளம்" இளைஞர்கள் அழைப்பின் பேரில் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" சார்பாக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து அதிகாரிகளுடன் காலை 7.45 மணியளவில் புறப்பட்டு சங்கரன்கோவிலுக்கு 11 மணிக்கு சென்று அடைந்தனர் ஆனால் அப்பொழுது காவல்துறை வழிமறித்து உங்களுக்கு அனுமதியில்லை என்று கூறினார், எவ்வளவோ பேசியும் பயன் இல்லாமல் நிகழ்ச்சி ரத்தானது.

இரத்த தானம் செய்ய காவல்துறை அனுமதி தராததால், , அங்கிருந்த இளைஞர்கள் வருத்தத்துடன் திரும்பி சென்றனர் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன் !!!

யாதவர் தன்னுரிமைப் பணியகம் 
ஆட்கொண்டார்குளம் - சங்கரன் கோவில்


மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா-இராமநாதபுரம்

பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம்
"மாவீரன் குருசாமி யாதவ்" அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா

"இராமநாதபுரம்" யாதவர் திருமண மண்டபத்தில் இரத்த தானம் முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது, 50 -க்கும் அதிகமான இளைஞர்கள் இரத்ததானம் அளித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அரசு மருத்துவமனை இரத்த வங்கி அலுவலர்கள் மிகச் சிறப்பாக செய்தனர், காவல்துறை அனுமதியுடன் சிறப்பாக முடிந்தது.


நன்றி !!! யாதவர் தன்னுரிமைப் பணியகம் 
இராமநாதபுரம்






Tuesday, March 3, 2015

மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா இரத்ததான முகாம்

பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம்

"யது குல போராளி" மறைந்த "மாவீரன் குருசாமி யாதவ்" அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா (04/03/2015)

"இராமநாதபுரம்" மற்றும் "சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளம்" ஆகிய இரு திசைகளில் இரத்த தானம் முகாம் நாளை காலை நடைபெற இருக்கிறது 
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள யாதவர் திருமண மண்டபத்தில், காலை 9 மணியளவில் "இரத்ததான முகாம்" நடைபெற இருக்கிறது,  !!! சமூக இளைஞர்கள் அனைவரும் எழுச்சியோடு தங்களுடைய இரத்ததை தானம் செய்ய இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் !!!!
நன்றி !!! 
யாதவர் தன்னுரிமைப் பணியகம் 
இராமநாதபுரம் மற்றும் சங்கரன் கோவில்

Sunday, March 1, 2015

ஆட்டோ டிரைவர் கொலையில் அலச்சியம்:யாதவ மகா சபை

ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்:                                                                                              

கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு அரசு ரூ. 50 லட்சம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தி. தேவநாதன் யாதவ் வலியுறுத்தினார்.
திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டோ ஓட்டுநர் பொன்னையா (24), பிப். 25 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து, 3 தினங்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பொன்னையா குடும்பத்தினரை தேவநாதன் யாதவ் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் போலீஸார் கவனம் செலுத்தாமல் பிற பணிகளில் ஈடுபடுகின்றனர். தச்சநல்லூரில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பான பிரச்னை குறித்து 2 தினங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொன்னையா கொலை செய்யப்பட்டார்.

இக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக அங்குள்ள காவல் ஆய்வாளரை சேர்க்க வேண்டும். காவல் ஆய்வாளர், உதவி ஆணையர் இருவர் மீதும் மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்படும்.

உழைக்கும் பருவத்தில் பொன்னையா கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே அவரது குடும்பத்திற்கு அரசு ரூ. 50 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். தச்சநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது. அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றார் அவர்.

பேட்டியின்போது, தென்மண்டல அமைப்புச் செயலர் மரியசுந்தரம் யாதவ், திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளர் முத்து, மாவட்டச் செயலர் சரவணன், இளைஞரணி நிர்வாகி சுந்தர், மாநில எஸ்.டி, எஸ்.சி செயலர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar