Recent Posts

"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, December 22, 2012

யாதவர்

யாதவர்
கோனார் என்போர் தமிழகத்தில் வாழும் மிக பழமையான தமிழ் சமுகம் ஆகும். இவர்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டதிலும் பரவலாக வாழ்கிறார்கள்.
சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி,திருவண்ணாமலை,திருச்சி,தூத்துகுடி,கடலூர்,விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், தஞ்சை, சென்னை போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள்.

இன்று ஆந்திரத்தோடு சென்றுவிட்ட சித்தூர் போன்ற மாவட்டங்களில் கணிசமான அளவு கோனார்கள் வசிக்கிறார்கள்.

மேலும் தமிழகத்தை ஒட்டி கர்நாடகாவில் கணிசமான அளவு கோனார்கள் உள்ளார்கள்.அங்கு அவர்கள் பூர்விகமாகவும் வசிக்கின்றனர் மேலும் வேலைக்காக சென்றவர்களும் உள்ளனர்.

கர்நாடக அரசு பதிவேட்டில் யாதவா(கன்னடம் பேசும் கொல்லா மற்றும் தமிழ் பேசும் கோனார்கள் ) உள்ளனர் (ஆதாரம்)

இவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த சத்திரியர்கள் ஆவர், கோனார் சமூகத்தினர் கால் நடை வளர்ப்பவர்களாகவும், போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக விளங்கி வருகின்றனர் தமிழ்நாட்டில் ஆயர்,இடையர்,கோன்,கோனார்,யாதவர்,கரையாளர்,பிள்ளை,யாதவ்,மந்திரி  என்றழைக்கபடுக்கிறார்கள்.

கோனார்கள் பண்டைய தமிழ் சமுகம் பகுத்த ஐந்திணைகளில் முல்லை திணையை சேர்ந்தவர்கள்.முல்லை திணை என்பது காடும் காடு சார்ந்த பகுதியும் ஆகும்.பண்டைய தமிழ் நூல்கள் இவர்களை ஆயர்கள் என்றும் இடையர்கள் என்றும் குறிப்பிடுகிறது. 

பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் பயன்படுத்தியவரை இவர்கள் கோனார் என்றே பயன்படுத்ததிவந்துள்ளனர்.நகர் பகுதியில் வாழும் இடையர்கள் பிள்ளை என்ற பட்டத்தையும் பயன்படுத்துகின்றனர் இடையர் இன மக்கள் மட்டுமே கோனார் என்ற பட்டத்தை பயன் படுத்துவார்கள் மற்ற சமுகத்தினர் யாரும் இந்த பட்டத்தை பயன் படுத்தியதில்லை,எனினும் மற்ற பெயர்களான பிள்ளை உள்ளிட்ட பெயர்கள் மற்ற சமுகத்தினறும் பயன்படுத்துகிறார்கள்.தற்போது யாதவ் என்ற பெயர் பரவலாக பயன்படுத்தபடுகிறது

இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.யாதவர்கள் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள். கிருஷ்ண பகவானைப் பல்வேறு பெயர்களால் வழிபடுகின்றனர். அவர்கள் சனிக் கிழமையைப் புனித நாளாகக் கருதுகின்றனர். ‘கோகுலாஷ்டமி’தான் அவர்களுக்கு மிக முக்கியமான திருநாள். அதற்கு மறுநாள் நடக்கும் உறியடி உதசவத்தின்போதுகிருஷ்ணரின் குழந்தைப்பருவ லீலைகளாகிய வெண்ணெய் திருடுதல், வெண்ணெய் மற்றும் தயிர்ப்பானைகளை உடைத்தல் முதலியவற்றில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

 கிருஷ்ணர்’ அவர்களுடைய குலத்தில் வளர்ந்தவர் என்பதால், யாதவர்களை மற்ற சமூகத்தார் அன்பு பாராட்டி நடத்துவதாகக் கூறப்படுகிறது.முன்பு, கிருஷ்ண ஜெயந்தியின் போது மஞ்சத் தண்ணீர் ஊற்றுவது இவர்களிடையே பிரசித்தம். முறை மாப்பிள்ளை, மாமன், மச்சான், முறைப்பெண் ஆகியோட் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்கிறார்கள். தென்மாவட்டங்களில் இன்றைக்கும் யாதவர் இனமக்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இரவு நேரங்களில் விளைச்சல் நிலங்களில் ஆடுகளை நிறுத்தி ‘கிடை’ போடும் வழக்கம் சிலரிடம் இன்றைக்கும் உண்டு. இதனால் நிலத்திற்கு மிகப்பெரிய சத்துக்களை வழங்குகிறார்கள். 

யாதவர்களில் சிலர் நிலச்சுவான்தார்களாக இருக்கிறார்கள்.ஒரு காலத்தில் எருதுகளை அடக்கி வீரத்தைக் காட்டிய்பின்பே, மணமகன் மணமகளை மணக்க முடியும் என்ற நிலை இருந்தது. இன்று அது வழக்கொழிந்து போய்விட்டது.முன்பு வயதுக்கு வந்த பெண்கள் பல்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சீக்கிரமே திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். இப்போது அந்தக் கட்டுப்பாடு வேகமாக மறைந்து வருகிறது.சிலர் அக்காள் மகளைத் திருமணம் செய்கின்றனர். சில பகுதிகளில் வாழும் யாதவர்கள் அத்தை மகள், மாமன் மகளை மட்டுமே மணக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.மணமக்கள் கலந்து பழகுவதற்காகவும், மணமகளின் வெட்கத்தை மாற்றும் பொருட்டும் திருமணத்தின்போது சில கேலி விளையாட்டுகள் நிகழ்த்தப்படுகின்ரன. தன்ணீர் நிறைந்த பானையில் ஒரு தங்க மோதிரத்தைப் போட்டு, அதை மணமக்களை எடுக்கச் சொல்கிறார்கள். மணமக்கள் வீட்டிற்குள் நுழையும்போது மணமகனின் சகோதரி, அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘ஆண் குழந்தை வேண்டுமா, பெண்குழந்தை வேண்டுமா’ என்று கேட்கிறாள். அதற்கு பதில் சொன்னபிறகே வழி விடுகிறாள். இது போன்ற பல சடங்கு சம்பிரதாயங்கள் இன்று இவர்களிடையே வழக்கொழிந்து போய்விட்டன.


1931 ஆண்டு எடுக்கபட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இடையர்களின் மக்கள் தொகை:
ராமநாதபுரம்:1,90,237
வட ஆற்காடு:1,60,003
திருநெல்வேலி:1,57,530
தென் ஆற்காடு:1,40,058
தஞ்சை:1,17,984
திருச்சி:1,15,934
செங்கல்பட்டு:1,13,563
மதுரை:83,802
மதராஸ்:23,611
கோயம்புத்தூர்:22,973
கன்னியாகுமரி:6,905
நீலகிரி:416
இது தமிழ் பேசும் இடையர்களுடையது மட்டுமே.
குறிப்பு:
1921 ஆம் ஆண்டு எடுக்கபட்ட கணக்கெடுப்பின் போது இருந்ததைவிட 1931ல் மதுரை மற்றும் ராமநாதபுரம் மக்கள் தொகை குறைந்ததாக ஒரு புகார்.

தெலுங்கு பேசும் இடையர்கள் இந்த கணக்கெடுப்பின் போது நாயுடு என பதிவு செய்தார்கள்.ஆனால் அவர்கள் இப்போழுது யாதவா என பதிவு செய்கின்றனர். இவர்களும் கணிசமான அளவு தமிழக்த்தில் வசிக்கின்றனர்.

பெயர்காரணம்

`இடை' (நடு) என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து `இடையர்' என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஐவகை நிலங்களில் `முல்லை' என்ற நடுக்காட்டில் புல்வெளி நிலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்ததையே இது எடுத்துக்காட்டுகிறது.

விவசாயிகள், வியாபாரிகள் என்ற இரு பிரிவினர்களுக்கு இடையே நடுவே ஒரு தொடர் கண்ணியாக இடையர்கள் இருந்ததால் அவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது என்று பூஜ்யர் போப் தஞ்சாவூர் பற்றிய தகவல் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இடையர்கள்தான் பிற்காலத்தில் தங்கள் பெயர்களுடன் கோனார் அல்லது கோன் (அரசன்) என்ற பட்டப்பெயரைச் சேர்த்துக்கொண்டுள்ளனர். 1891ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையில் `பிள்ளை, கரையாளர்' என்ற பட்டப் பெயர்களையும் இவர்கள் பயன்படுத்திக்கொண்டது பதிவாகியுள்ளது. இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.

பாரம்பரியம்

இவர்களுக்கென நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் பல ரிஷிகள் யாதவர்களே என்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் இருந்த சித்தர்களில் திருமூலர் மற்றும் இடைக்காட்டுச் சித்தர் ஆகியோர் ஆயர் குலத்தை சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறார்கள்.
அரசியலிலும் இலக்கியத்திலும் இச்சமூகத்தினருக்கு அதிக ஈடுபாடு உண்டு. தமிழகத்தில் பதிப்புத்துறை பெரிதும் வளர்ச்சியடையாத காலத்திலேயே மதுரையில் பதிப்புத் துறையில் ஈடுபட்ட இ.மா.கோபால கிருஷ்ணக்கோனார், ஆ.கார்மேகக் கோனார், பொன்னையக் கோனார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆயர்குல வீரம்: ஆயர் விளையாட்டு

மஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளை களைக் கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள்(ஜல்லிக்கட்டு )  என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு. அக் காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்தோடு நிற்பர். செல்வச் சிறுவர் உயர்ந்த பரண்களில் அமர்ந்திருப்பர். ஏறுகளுடன் போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞர்கள் ஆடையை இறுக்கிக் க ட்டி முறுக்காக நிற்பர். அப்போது முரசு அதிரும். பம்பை முழங்கும். கொழுமையுற்ற காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும். களத்திலுள்ள கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை; கலைந்து பாயும் ஒரு காளை; தலை நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை. அவற்றின்மீது மண்டுவர் ஆயர்குல மைந்தர். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்து அதனையே குறிக்கொண்டு செல்வர். வசமாகப் பிடி கிடைத்தால் காளையின் விசையடங்கும்; வீறு ஒடுங்கும்; ஏறு சோர்ந்து விழும்.

சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்:

சங்க இலக்கியமான கலித்தொகை:

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் என்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை(ஆயர்) மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." என்பதாகும். பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது

மக்கள் தொகை

இந்திய மக்கள் தொகையில் சுமார் 20% முதல் 25% யாதவர்கள் தான்.
இந்தியா முழுவதும் வாழும் ஒரே ஒரு சமுகம் யாதவர் சமுகம் மட்டும் தான்.

குறிப்பிடத்தக்க நபர்கள்(அரசியல்)

தேசிய அளவில்:சவுத்ரி பிரம் பிரகாஷ் யாதவ்
 தில்லி முதல் முதல்வர்

பிரபுல்லா சந்திர கோஷ் 
மேற்கு வங்க முதல் முதல்வர் 

மண்டல் யாதவ்
பீகார் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்


ராம் நரேஷ் யாதவ்
உத்தர பிரதேச முன்னாள் முதல்வர்

பாபுலால் கவுர்
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்

ராவ் விரேந்திர சிங்
ஹரியானா முன்னாள் முதல்வர்

வேதவாக்காக பிரசாத் ராய்
பீகார் முன்னாள் முதல்வர்

பட்டோம் தாணு பிள்ளை
கேரளா 2 வது முதல்வர்

லாலு பிரசாத் யாதவ்
பீகார் மற்றும் அரசு முன்னாள் ரயில்வே அமைச்சர் முன்னாள் முதல்வர்இந்திய

முலாயம் சிங் யாதவ்
உத்தர பிரதேசம் மற்றும் அரசு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முன்னாள் முதல்வர்இந்திய

ராப்ரி தேவி
பீகார் முன்னாள் முதல்வர்

அகிலேஷ் யாதவ்
உத்தர பிரதேச முதல்வர்

அண்ணா அசாரே

பாபா ராம்தேவ்
தமிழகம்சட்டநாத கரையாலர் முன்னாள் சபாநாயகர்-(காங்கிரஸ்)


முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர்  ராதாகிருஷ்ணன் பிள்ளை,-(காங்கிரஸ்)


கோபாலகிருஷ்ணன் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர்                 தலைவர் தமிழ்நாடு யாதவ மகாசபை

மாவீரன் C.குருசாமி யாதவ் முன்னாள் தலைவர் சங்கரன்கோவில் ஒன்றியம்


முன்னாள் அமைச்சர் திரு கண்ணப்பன் (or) ராஜகண்ணப்பன்
(மக்கள் தமிழ் தேசம் கட்சி நிறுவனர்),(அ தி மு க)

S.பாலகிருஷ்ணன்
முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்(1996-2001),முன்னாள் தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி-(காங்கிரஸ்)

முன்னாள் அமைச்சர் திரு.தமிழ்குடிமகன்,(தி மு க)

முன்னாள் அமைச்சர் திரு.பெரியகருப்பன்,(தி மு க)

திரு தேவநாதன் யாதவ் யாதவமகாசபை தேசிய தலைவர்1 comment:

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar