"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, December 22, 2012

செஞ்சிகோட்டை-ஆனந்த கோனார்


செஞ்சி என்றவுடன் நாடோடிபாடல்களால் அறியப்பட்ட தேஜ் சிங் என்ற தேசிங்கு ராஜனே நினைவுக்கு வருவான். உண்மையில் அவன் பதவியில் இருந்தது பத்து மாதங்களே. நாராயணப்பிள்ளை என்பவர் எழுதிய கர்னாடக ராஜாக்கள் சரிதம் என்ற நூல் செஞ்சிக்கோட்டையின் வரலாற்றை கி.பி 1200 ஆனந்த கோனார் என்பவர் தொடங்கிவைத்ததாக தெரிவிக்கிறது. ஏறக்குறைய 300 ஆண்டுகள் கோனார்கள் செஞ்சிக்கோட்டையை ஆள்கின்றார்கள். பின்னர் குறும்பர்கள், நாயக்கர்கள், பீஜப்பூர் சுல்தான், மராட்டியர், மொகலாயர், ஐரோப்பியரென பலரிடம் இக்கோட்டை கைமாறி இருக்கிறது.

இன்று செஞ்சியென பலரும் அழைத்தாலும் தொடக்ககாலத்தில் அதாவது பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டுவரை அதற்கு கிருஷ்ணபுரம் என்றே பெயர். காரணம் கோனார்கள் தொடங்கி, குறும்பர்கள், நாயக்கர்களென வைணவ மதத்தைசேர்ந்தவர் ஆண்டிருக்கிறார்கள். செஞ்சிக்கு இரண்டரைகல் தொலைவிலிருக்கும் சிங்கவரம் விஷ்ணு செஞ்சி என்று அழைக்கப்பட பிறபகுதி சிவ செஞ்சி என்று அழைக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்திற்கு செல்வதற்கு முன் அனந்த சயனனாக படுத்திருக்கும் ஸ்ரீ ரங்கநாதரிடம் தேசிங்கு ராஜன் உத்தரவு கேட்டானென்றும் யுத்தத்தின் முடிவை அறிந்த நாராயணன் அனுமதிகொடுக்க மறுத்து முகத்தைதிருப்பிக்கொண்டாரென்றும் சொல்லப்படுகிறது. ஒரே கல்லில் செதுக்கபட்டுள்ள இந்த இருபத்துநான்கடிநீள சுதையைக்காண கண்கோடிவேண்டும். அத்தனை பிரம்மாண்டம். பின்னர் பீஜப்பூர் சுல்தான்கள் பாதுஷாபாத் என்று செஞ்சியை அழைத்தார்கள். மராட்டியர்கள் சண்டி என்று பெயர் சூட்டினார்கள்.மொகலாயர்கள் நஸரத் கத்தா என்று பெயர் வைக்க, பதினேழாம் நூற்றாண்டில் செஞ்சியென்று அழைக்கத்தொடங்கியவர்கள் பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும். செஞ்சியை ஆண்ட நாயக்கர்களில் கிருஷ்ணப்ப நாயக்கர் முக்கியமானவர்.

செஞ்சி என்ற ஊர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து 23 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. செஞ்சியிலிருந்து 1 கி.மீ தொலைவில் செஞ்சிக் கோட்டை உள்ளது.
கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து செஞ்சி தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. சுமார் கி.பி. 1200இல் அனந்த கோனார் என்பவர் செஞ்சியிலுள்ள மலையில் கோட்டையைக் கட்டினார் . இக்கோட்டை அனந்தகிரிக் கோட்டை எனப்பட்டது. சுமார் கி.பி. 1240இல் அனந்த கோனார் வழிவந்த கிருஷ்ண கோனார் செஞ்சியில் மற்றொரு கோட்டையைக் கட்டினார் என்றும், இதுவே கிருஷ்ணகிரி கோட்டை எனப்பட்டது.























0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar