Recent Posts

"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, June 29, 2015

மறைக்கபடும் வரலாறு பகுதி 3( ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்)ஆயர்களே  ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்:

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)


ஒரு முழுமை அடையாத வாக்கியம் இதை பல இடங்களில் நீங்கள் பார்த்திருக்க கூடும்.அந்த இரண்டு வரிகள் குமரிகண்டம் பற்றி கலித்தொகை கூறுவது.

இந்த வரிகள் முழுமை அடைந்தால் குமரியில் வாழ்ந்த மக்கள் யார்? என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் ஒரு சிலர் முற்றுபெறாமல் நிருத்திவிட்டனர்.
முழுமை பெரும் அந்த வரிகள்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய
நல்லினத்து ஆயர்”
(கலித். 104)

தொல்குடி மக்களான நல்லினத்து ஆயர் என்று தங்கள் பூர்வீகத்தைக் கூறுகிறாள் ஒரு ஆயர் மகள்.3 ஆம் ஊழிக்கு முன் இருந்த இவர்கள் குடியினர்,
ஊழியின் காரணமாக தங்கள் இருப்பிடங்கள் கடலுக்குள் முழுகி விடவே,
பாண்டிய அரசனைத் தொடர்ந்து நிலப்பகுதிக்கு வந்தனர் என்பதை
இந்த வரிகள் தெரிவிக்கின்றன.

தன் நாட்டுப் பகுதியைக் கடல் கொண்டது என்பதற்காக அதனை ஈடு கட்டிக்கொள்ள புலி, கெண்டை பொறித்த சோழர் சேரர் நாட்டுப் பகுதியைக் கைப்பற்றிக் தன் கெண்டைமீனைப் பொறித்துக்கொண்டவன் 'வாடாச் சீர்த் தென்னவன்'. நல்லினத்து ஆயர் (பசு வளர்க்கும் ஆயர்) அந்தத் தென்னவன் குடியில் பிறந்தவர்களாம். (கலித்தொகை 104)- நல்லுருத்திரனார்

இதன் மூலம்  ஆயர்களே  ஆதி தமிழர்கள் கோனார்களே குமரியில் வாழ்ந்தவர்கள் நிருபிக்கபடுகிறது.

ஆயர்களே  ஆதி தமிழர்கள் கோனார்களே குமரியில் வாழ்ந்தவர்கள் என கூறாமல் மறைக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட இனத்தின் வரலாற்றை  மறைக்க  ஏன் இத்தனை பேர் முயல்கின்றனர்.?

கிழே உள்ள படங்களில் உள்ளது குமரிக்கண்டம் பற்றிய தொகுப்பு.வந்தேரிகள் தங்களை தமிழர்களாக காண்பிக்க பூர்வீக தமிழர்களின் அடையாளங்களை அழிக்கின்றனர் என்ற என்ன தோன்றுகிறது.
இனியாவது இடையர் குலம் தன் அடையாளங்களை இழக்காமல் பாதுகாக்குமா என்பது காலம் தான் பதில் சொல்லும்.தொகுப்பு
திருவண்ணாமலை தாமோதரன் கோனார்

3 comments:

 1. சங்ககால ஆயர்களின் தலைநகரம்? - குத்துக்கல்வலசை முதல் ஆய்க்குடி வரை
  குத்துக்கல்வலசை இடையர்குடி மகன் ஒருவர் என்னிடம் என் முன்னோர் இந்த நெடுங்கல்லை வணங்குவதாகச் சொன்னார். எனக்கு அப்பவே மண்டையில் தீப்பொறி தட்டியது. இங்கு குட்டி இராமர் கோயில், இன்னும் சில இந்து கோயில்கள் உள்ளன. அத்தகு கோயில் அங்கிருக்கும் போது இவர் முன்னோர் எதுக்கு கல்லை வழிபட்டனர். எனில் இராமர் கோயில் அங்கு வரும் முன்னரே இவர்கள் இக்கல்லை வழிபட்டிருக்க வேண்டும். மேலும் தென்காசியில் உள்ள ஆற்றுப்பகுதிகளையும் மலையில் காணப்படும் பழைய தொல்லியல் சின்னங்களையும் நோட்டமிட்ட போது இது முக்கியமான ஒரு பெருங்கற்காலப்பகுதி என்பதை கண்டு கொண்டேன்.
  சங்ககாலத்திலும் சரி. முதலாம் பாண்டியப் பேரரசின் போதும் சரி ஆயர்கள் பாண்டியர்களோடு கொண்டு கொடுத்தல், அரசாங்க உறவுகள், வணிக ஒப்பந்தங்கள், கூட்டு அங்காடிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொண்டனர். பாண்டியர் செப்பேடுகள் பத்து என்னும் நூலில் 4 செப்பேடுகள் ஆயர்களுடையவை. ஆயரின் செப்பேடும் பாண்டியர் செப்பேடும் பிரித்துக்காண முடியா வண்ணம் ஒரே மாதிரி இருக்கும். முதலாம் பாண்டியப் பேரரசின் போது வெளியிடப்பட்ட ஆயர் செப்பேடுகள் அனைத்திலும் அந்த கால ஆயர்கள் பாண்டியர் பெயரை தங்கள் பெயரோடு இணைத்தே வைத்துக்கொண்டனர். எடுத்துக்காட்டுக்கு வரகுண பாண்டியனின் ஆட்சியின் போது இருந்த ஆய் மன்னன் வரகுண பாண்டியன் என்றே பெயரை வைத்துக்கொள்வான். அந்த அளவுக்கு இரு மரபுகளும் நெருக்கமுடையவை. அதே நேரம் அவ்வப்போது போரும் நட‌ந்ததுண்டு.

  ReplyDelete
 2. சங்ககால ஆயர்கள்/இடையர்கள்
  1. கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - குறுந்தொகை 84
  என்று கூறப்படும் பொதியில் ஆயர்கள் இங்குள்ள இடையர் மக்களுக்கு தொடர்புடையவராய் இருக்கலாம். இங்குள்ள இடையர் மக்களே குத்துக்கல்லை வழிபட்டதாகவும் தற்போது வழிபடுவதில்லை என்றும் கூறினர்.
  ஆயர் அல்லது இடையர் இவர்கள் புதிய மற்றும் பெருங்கற்காலத்திலும்
  முக்கிய பங்காற்றியவர்கள். சங்க இலக்கியத்திலும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இதை ஆயர் குல மன்னர்களிடமிருந்து கைப்பற்றியதாக மதுரைக்காஞ்சி பாடல்கள் உண்டு. அவை,
  2. அவை இருந்த பெரும்பொதியில் பேய்மகளிர் ஆடத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் வென்றான் -மதுரைக்காஞ்சி 161

  3. திதியன் என்ற மன்னன் பொதியிலை ஆண்டான்.
  செல்சமம் கடந்த வில்கெழு தடக்கை, பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன், இன்னிசை இயத்தின் கறங்கும் கல்-மிசை அருவி (குற்றாலம்) – ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் – அகம் 25
  4. திதியன் என்றவனை தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்றான்.
  கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
  ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்,
  சேரல், செம்பியன், சினம்கெழு திதியன் - அகம் 36
  ஒரு வேளை திதியனே கூட பொதியில் ஆயர் தலைவனாக இருக்கலாம். அதனால் திதியனை வென்ற தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அவன் ஆண்ட பொதியிலை பின்னொரு காலத்தில் வென்றிருக்கக் கூடும்.
  மேலுள்ள சான்றுகளை வைத்து பார்க்கும் போது பொதியில் ஆயர் மறக்குணம் மிக்கவராய் இருந்தனர் என்பது தெளிவு.
  படிநிலை வளர்ச்சி
  1. குத்துக்கல், நடுகல் வழிபாடு
  2. சின்ன வழிபாடு - இப்பதிவில் மேற்கூறப்பட்ட சூல வழிபாடு
  3. பின்னர் உருவ வழிபாடு.
  இம்மூன்றுமே வழிபாட்டு முறையில் அடுத்தடுத்து வருவன. இதை வைத்து பார்க்கும் போது பெருங்கற்கால சமூகம் இங்கு தொன்றுதொட்டு இருந்தது தெரிகிறது

  ReplyDelete
 3. Virugambakkam MLA DMDK Parthsarathy,
  Dr.NAMMALWAR Phd( Joint Director fishries & Marine Research) Rtd
  Belongs to yadav community

  ReplyDelete

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar