Recent Posts

"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Thursday, May 8, 2014

ஜல்லி கட்டு விளையாட்டிற்கு தடை ! யாதவர்கள் கடும் கண்டனம் !

இவ்வுலகில் மிகவும் மூத்தக்குடி தமிழ்க்குடி , இவ்வுலகின் முதல் நாகரிக இனம் தமிழ் இனம் , இவ்வுலகின் முதல் போர் வீரன் தமிழன் மற்றும் கலை இலக்கியம் பண்பாடு அறிவியல் என பல பெருமைமிகு அடையாளங்கள் கொண்டது எமது தமிழ் இனம் . 
ஜல்லி கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை – கறுப்புக்கொடி ஏற்றி துக்கம் அனுஷ்டித்த வீரர்கள்

அத்தகைய இனத்தின் வாழ்வியல் தடங்கலும் சிறப்புகளும் பெருமைகளும் ஒவ்வொன்றாக இனத்துரோகிகளாலும் இந்திய நயவஞ்சக ஆட்சியாலும் மதத்திற்கொரு சட்டம் என்ற போலி மதச்சர்ப்பின்மையாலும் தமிழனின் குறிப்பாக இந்துக்களின் பல உரிமைகளும் அழிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகிவிட்டது . 

தமிழனின் நிலப்பரப்பு சுருக்கப்பட்டது , நீர் ஆதாரம் அபகரிக்கப்பட்டது , தமிழீழம் நசுக்கப்பட்டது என எண்ணிலடங்கா துயரங்களை தமிழினம் சுமந்து நிற்கின்ற இவ்வேளையில் மேலும் ஒரு பழிவாங்கும் வேலையை இனத்துரோகிகளும் இந்திய போலிச் சட்டமும் செய்துள்ளது. 

அதுதான் இன்று வெளியிட்ட "ஜல்லி கட்டு விளையாட்டிற்கு தடை" என்ற துரோகத் தீர்ப்பு. தடைக்கான காரணம் பிராணிகளை வதைப்பது குற்றமாம், ஐயகோ ! இந்த கேடு கெட்ட இந்திய சட்டத்தின் கண்களுக்கு தினம் தினம் ஆநிரைகள் கொள்ளப்பட்டு விற்கப்படுவது தெரியவில்லையா ? மாட்டிறைச்சி விற்ப்பனையை சட்டப்படி குற்றம் என அறிவித்து அதை தடுக்க முடியுமா ? இந்த போலி மதசார்பற்ற இந்திய சட்டங்களால் அதை தடுக்க முடியுமா ? 

தமிழனின் கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் முல்லைநிலத்தின் ஆயர்(யாதவர்) குடியில் துவங்கி, தமிழன் பரவி வாழ்ந்த பாரத தேசம் முழுவதும், துவாரகை மன்னன் தமிழ் கடவுள் கண்ணனைத் தொடர்ந்து, சிந்துசமவெளி வரை கடைபிடிக்கப்பட்டும் விளையாடப்பட்டும் இன்று வரை தமிழ் குடியில் தொடர்ந்து வரும் வீர விளையாட்டல்லவா ஆநிரை அடக்குதல். 

அதற்க்கு ஆதாரங்கள் பலவும் உண்டல்லவா நம்மிடம். இவ்வாறு பெருமைமிகு பழமைமிகு வீரமிகு தமிழனின் வீர விளையாட்டான "ஆநிரை அடக்குதலை" எப்படி இந்த இந்திய சட்டம் தடை செய்யலாம் ? தமிழன் எனில் அவனுக்கெதிராக எதையும் செய்யலாம் என்ற நிலையை அல்லவா காட்டுகிறது . இதே நிலை நீடிக்கும் எனில் எதிர்கால தமிழனின் ஒட்டுமொத்த பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் நிலை என்னாவது ?

ஏர் உழுதல் கட்டை வண்டி போன்ற வேலைகளுக்கும் தான் மாடுகள் பயன்படுத்தப் படுகிறது . அதற்கும் தடைவிதிக்க முடியுமா அல்லது அதற்க்கான வேலைகளையும் இனத்துரோகிகளும் இந்திய அரசும் செய்கிறதா ? தமிழினமே நான் இப்படியே உறங்கிக்கொண்டிருந்தாள் உடுத்தியிருக்கும் உடையும் மிஞ்சாது. 

ஆயர் (யாதவர்) மூலம் தோன்றிய " ஜல்லி கட்டு விளையட்டிற்க்கான " தடையை யாதவ சமுதாயம் ஒருபோது ஏற்காது என கூறிக்கொள்கிறோம். மேலும் இந்த தீர்ப்பை வண்மையாக கண்டிக்கின்றோம். உத்தரவை திரும்பப் பெறவில்லையெனில் அணைத்து யாதவர்களும் ஜல்லிக்கட்டு வீர்களும் இணைந்து போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துக்கொள்கிறோம் .....

via facebook

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar